Tamil news today 15-07-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 15.7.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 15/7/20, Today News in Tamil 15.07.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.
Tamil News Today Sri Lanka
2016 ம் ஆண்டு மத்திய வங்கி முறிகள் மோசடியில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணை செய்து வாக்குமூலங்களை பதிவு செய்ய சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உத்தரவு.
“வேட்பாளர் ஒருவர் கள்ள வாக்குகள் போட்டார், என எமக்கு முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன. அவை தொடர்பில் பரிசீலித்து நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்” தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேச பிரிய தெரிவிப்பு.
“கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வடக்கில் இராணுவ கெடுபிடி அதிகரித்து வருகிறது” ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பு.
“மாற்றத்தை எதிர்பார்க்கும் இளைஞர் யுவதிகள் எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள்” ஈழமக்கள் ஐனநாயக கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட வேட்பாளர் சி.கிரிதரன் கருத்து.
நாட்டில் இதுவரை தொற்று, உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2653 ஆக அதிகரிப்பு.
கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டதால் கொழும்பில் அமைந்துள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமொன்று மூடல்.
“இலங்கையில் பொறுப்புக்கூறல் விடயத்தில் இன்னும் வலுவான அணுகுமுறைகளை பிரயோகிப்பது அவசியம்” சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்து.
கம்பஹா றாகமவிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான ஒருவர் அங்கு அடையாளம் காணப்பட்டதை அடுத்து மருத்துவமனை தற்காலிகமாக மூடல்.
கொரோனா வைரஸ் தொற்று என நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டசிறைக் கைதி எட்டாவது மாடியில் இருந்து விழுந்து இறப்பு. அவருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படவில்லை என தகவல்.
“நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையால் மக்கள் அநாவசியமாக வெளியே செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்” – இலங்கை மருந்தகக்கூட்டுத்தாபனத்தின் தலைவரும் நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணருமான பிரசன்ன குணசேன கருத்து.
நாட்டில் எதிர்வரும் சில நாட்களுக்கு தொடர்ச்சியாக மழை பெய்யும் எனவும் கடல் அலை 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு.
இலங்கை விமான நிலையத்தை தற்போது திறக்காதிருக்க தீர்மானித்துள்ளதாக சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க..!
Tamil News Today India
இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் எலி உள்ளிட்ட விலங்குகளுக்கு செலுத்தி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை தெரிவிப்பு.
இந்தியா ,ஆப்கானிஸ்தானிற்கு இடையிலான வர்த்தகத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு வாகா எல்லையை திறக்க பாகிஸ்தான் அரசு ஒப்புதல்.
Tamil News Today World
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 6,248பேர் பாதிப்பபு, 175பேர் உயி(ரிழ)ப்பு.
தென்சீனக் கடலில், கடல் வளங்களை சீனா பின்தொடர்வது முற்றிலும் சட்டவிரோதமானது, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ நிராகரித்துள்ளார்.
“சில நாடுகளின் அரசுகள் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் இந்த தொற்று மேலும் மோசமாகிக்கொண்டே போகும்” உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் எச்சரிக்கை..!
சீன விமானங்களை வாரத்திற்கு ஒரு பயணிகள் விமானம் என பிரான்ஸ் கட்டுப்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் போது சுகாதார ஊழியர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி செலுத்துவதற்காக, பிரான்ஸ் 8 பில்லியன் யூரோக்கள் அதிகமாக கொடுக்கவுள்ளது.
அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு நாட்டுக்குள் நுழைய தடையுத்தரவு சீன அரசு
அமெரிக்க கடற்படையில் போர் விமானத்தை இயக்கும் விமானியாக வரலாற்றில் முதல் முறையாக கறுப்பினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தெரிவு.
கிராகோவிலிருந்து டப்ளினுக்கு வந்த ரியானைர் விமானத்தின் கழிப்பறையில், விமானத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கூறும் குறிப்பொன்று, கண்டுபிடிக்கப்பட்டதால் விமானம் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற மொத்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 2,500 ஆக அதிகரிப்பு.
Tamil News Live
பாவனாவின் வித்தியாசமான நடிப்பில் “பஜரங்கி 2 ” திரைப்படத்தின் டீசர்..!
லா லிகா கால்பந்து தொடரின், கிரெனடா அணிக்கெதிரான லீக் போட்டியில் ரியல் மட்ரிட் அணி வெற்றி.
ஐரோப்பிய கழகமட்ட போட்டிகளில் மன்செஸ்டர் சிட்டி அணி விளையாடுவதற்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் தடை நீக்கம்.
Today News Tamil – Tamil News Today 15-07-2020
By: Tamilpiththan