14-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 14-07-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live

0

Tamil news today 14-07-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 14.7.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 14/7/20, Today News in Tamil 14.07.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.

Tamil News Today Sri Lanka

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திங்கட்கிழமை கண்டி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலதா மாளிகைக்கு சென்று சமயக்கிரியைகளில் ஈடுபட்டு ஆசிர்வாதம் பெற்றார்.

“பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கி ஏனைய மதங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும்” பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ராஜங்கணை யயா 01, 03 மற்றும் 05 ஆகிய பிரதேசங்கள் முடக்கி வைப்பு. வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவிப்பு.

எந்தக் காலமும் விளைச்சலையும் அதிக வருமானத்தையும் ஈட்டக்கூடிய வளத்தைக் கொண்டது மட்டக்களப்பு மாவட்டம் அங்கு விளைச்சல் தரும் பயிர் நிலக்கடலை என மட்டக்களப்பு விவசாய உதவிப் பணிப்பாளர் கருத்து.

பாதாள உலகக் குழு உறுப்பினரான அங்கொட லொக்கா மற்றும் பெத்தியாகொட சங்க ஆகியோரின் உதவியாளர்கள் இருவர் கைது..!

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து அரச மற்றும் தனியார் பேருந்துகளில் மேற்கொள்ளப்படும் விற்பனை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை..!

கொரோனா தொற்றைத் தடுக்கும் பணியில் ஈடுபடுவோரின் நலனுக்காக 108 நாட்கள் விரதமிருந்த யாழ் முதியவர் சின்னத்தம்பி நடராசா (81) …

வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் குழுவிற்கு எச்சரிக்கை நோட்டீஸ்..!

Tamil News Today India

இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை விரைவு படுத்தும் நோக்கில் 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படவுள்ளதாக கூகுள் தலைமை செயலக அதிகாரி சுந்தர் பிச்சை அறிவிப்பு.

கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் முயற்சிக்கு இந்தியா தமது ஆதரவினை வழங்க தயாராகவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஐரோப்பிய யூனியனுக்கு கடிதம்.

அமெரிக்காவிடம் இருந்து சுமார் 72 ஆயிரம் தானியங்கி இயந்திரத் துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய இந்தியா திட்டம்.

கிர்கிஸ்தான் மருத்துவ மாணவர்களையும். ஈரானிலுள்ள‌ மீனவர்களையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடடிவக்கை எடுக்க வேண்டும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ.

Tamil News Today World

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் புதல்வி ஸின்ட்ஸி மண்டேலா திங்கட்கிழமை காலமானார்.

ஹொங்கொங்கிலிருந்து தங்கள் நாட்டுக்கு வந்துள்ள 10,000 பேருக்கு, நிரந்தர குடியுரிமை வழங்க அவுஸ்ரேலியா அரசு முடிவு..!

சான் டியாகோவில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளத்தில் தரித்துவைக்கப்பட்டிருந்த கப்பலில் வெடி மற்றும் தீ விபத்தில் 21பேர் காயம்..!

கனடாவில் முதல்முறையாக இரட்டை கை மாற்று அறுவை சிகிச்சை.. 2015ஆம் ஆண்டில் பாக்டீரியா மூளைக்காய்ச்சலால் தனது இரு கைகளையும் இழந்த ரிக் தாம்சன் என்பவருக்கு அறுவை சிகிச்சை செய்ய, ஒன்றாரியோ மருத்துவர்கள் தீர்மானம்.

Tamil News Live

பிரபல ஹிந்தி நடிகர் ‘அனுபம் கெர்’ குடும்பத்தில் நான்கு பேர் கொரோனா வைரஸ்சினால் பாதிப்பு.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல நடிகை திவ்யா சௌக்சே(28) மர(ண)ம்.!

Today News Tamil – Tamil News Today 14-07-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 14.07.2020 Today Rasi Palan 14-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next article15-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 15-07-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live