13-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 13-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live

0

Tamil news today 13-06-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 13.6.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 13/6/20, Today News in Tamil 13.06.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.

Tamil News Today Sri Lanka

மத அடிப்படையில் சிறுபான்மையின மக்கள் மீது இலங்கை அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்ட‌ பாகுபாடு தொடர்ச்சியாக காண்பிக்கப்பட்டு வருவதாக சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அறிக்கையில், அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து 223 இலங்கையர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

குத்தகை வழங்கல் கம்பனிகள் தொடர்பான நாடாளுமன்ற சட்டம், திருத்தியமைக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினரால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

Tamil News Today India

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்தவர்கள் சித்த மருத்துவ சிகிச்சையில் 7 நாட்களில் 7 குணமடைந்து வீடு திரும்புகின்றனர்‍ – சித்த மருத்துவர் வீரபாபு.

தமிழக சுகாதாரத்துறைச் செயலாளராக இருந்துவந்த பீலா ராஜேஷ் அவர்கள் பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் இனிப்பு வகைகளை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார் – கொல்கத்தாவைச் சேர்ந்த ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர்.

காவிரி, டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தண்ணீரை திறந்து வைத்தார்.

வடக்கு, கிழக்கு மாநிலங்களில் இயற்கை விவசாயம் மிகப்பெரும் இயக்கமாக மாறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tamil News Today World

பசி விரக்தியால் லெபனான் முழுவதுமுள்ள நகரங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் காரணமாக, தென்னாபிரிக்காவின் பிரிடோரியா நகரிலுள்ள விமானப் படை தலைமையகம் மூடப்பட்டுள்ளது.

பொருளாதார சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு துருக்கியில் மீண்டும் சர்வதேச விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தலிபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு ஆப்கானிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளதாக கட்டார் வெளியுறவுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனாவின் கொரோனா வைரஸ் (கொவிட்-19) விவகாம் தொடர்பான வர்த்தக‌ அச்சுறுத்தலுக்காக ஒருபோதும் எங்கள் மதிப்பை விற்க தயாராக இல்லை என அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்க நாடான, புருண்டி நாட்டு அதிபர் பியரி குருன்சிஸா திடீரென மரணம் அடைந்துள்ளார். அவர் மாரடைப்பால் இறந்ததாக கூறப்படும் நிலையில் கொரோனா நோய் தொற்றால் இறந்தாரா? என சர்ச்சை எழுந்துள்ளது.

Tamil News Live

கொரோனா பரவல் அதிகமாகி வருவதால், தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிற்குமாறு நடிகர் விஜய், ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிகழ்ச்சி தொகுப்பாளரும், தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் என் ஜன்னல் வந்த காற்றே பாடலை பாடியுள்ள, திவ்யாவிடம் வழிபோக்கர்கள் பல லட்சம் கொள்ளை.

Today News Tamil – Tamil News Today 13-06-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 12.06.2020 Today Rasi Palan 12-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 13.06.2020 Today Rasi Palan 13-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!