10-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 10-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live

0

Tamil news today 10-06-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 10.6.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 10/6/20, Today News in Tamil 10.06.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.

Tamil News Today Sri Lanka

தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக மங்கள சமரவீர அறிவிப்பு  

 இலங்கையில் இராணுவ ஆட்சிக்கு வித்திடப்பட்டுள்ளதாக வெளிவரும் கருத்துக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா அவர்கள் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூன் 29 ம் திகதியுடன் அனைத்து பாடசாலைகளின் விடுமுறைகள் நிறைவுக்கு வருவதாக கல்வி அமைச்சர் டளஸ் அளகப்பெருமாள் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை 4 கட்டங்களாக மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தரம் 3 மற்றும் 4 ஆம் தரங்களுக்கு காலை 07:30 முதல் முற்பகல் 11:30 மணி வரையும் 5 ஆம் தரத்துக்கு காலை 07:30 முதல் நண்பகல் 12 மணிவரையும் 6, 7, 8 மற்றும் 9 ஆம் தரங்களுக்கு காலை 07:30 மணி தொடக்கம் பிற்பகல் 01:30 மணிவரையும் தரம் 10, 11, 12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கு காலை 7:30 முதல் மாலை 3:30 மணி வரையும் கல்வி நடவடிக்கைள் இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் அனைத்து தரப்பும் ஒன்றிணைய வேண்டும் என்று மாவை பகிரங்க அழைப்பு.

Tamil News Today India

தமிழகத்தில் நாளை (புதன்கிழமை) முதல் தனியார் பேருந்துகள் இயங்கவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் அறிவித்துள்ளார்.

ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு உள்ளிட்ட அனைத்து வாகன ஆவணங்களையும் புதுப்பிக்கும் காலக்கெடு செப்டம்பர் 30 ம் திகதி வரை நீட்டிப்பு: மத்திய அரசு.

தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகியுள்ள நிலையில், மத்திய கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, மற்றும் 11ஆம் வகுப்பில் மீதமிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்திருக்கிறார். மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கும் வேளை மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கு உதவ வேண்டும். அரசியல் விளையாட்டுக்கான நேரம் இது அல்ல என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Tamil News Today World

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பாடசாலைகள் திறக்கப்படாது என பிலிப்பைன்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

 கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்ட்டுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர். 

கொரோனா தடுப்பூசிகள் கிடைப்பதற்கு குறைந்தது ஓராண்டு ஆகக்கூடும் என சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

இனவாதத்தையும் பாகுபாட்டையும் தோற்கடிக்க அமைதியாகவும், சட்டப்பூர்வமாகவும் செயற்பட வேண்டும் என இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நாட்டு மக்களை வலியுறுத்தியுள்ளார்.

கனடாவின் மிகப்பெரிய நகராட்சி பொலிஸ் சேவையின் முதல் கறுப்பினத் தலைவரும் ரொறன்ரோவின் பொலிஸ்துறைத் தலைவருமான‌ மார்க் சாண்டர்ஸ், தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.

Tamil News Live

ஆறு வல்லரசு நாடுகளுடனான தெஹ்ரானின் 2015 அணுசக்தி ஒப்பந்தம் ஒக்டோபரில் நிறைவுக்கு வரும் நிலையில், ஆயுதத் தடையை விதிக்க வொஷிங்டனின் உந்துதலை எதிர்ப்பதற்கு ஈரான் இன்று (புதன்கிழமை) ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் அழைப்பு விடுத்துள்ளது.

பரிசில் ஜூன் 8 ஆம் திகதி முதல் அனைத்து விளையாட்டு அரங்குகளும் திறக்கப்படுவதாக பரிஸ் நகரசபை அறிவித்துள்ளது.

முதன் முறையாக விக்ரம் தனது மகன் ,துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார்.

நடிகர் அர்ஜுனின் உறவினரான கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா குழந்தையை பார்ப்பதற்கு முன்னரே மரணித்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யா நடித்த ‌24 படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருவதாகவும், ஆத்ரேயா கதாபாத்திரம் முக்கியமானதாக இருக்கும் எனவும், நீண்ட நாட்களாக சூர்யா மீண்டும் தன்னுடன் இணைந்து இன்னொரு படம் செய்ய வேண்டும் என விரும்புவதாகவும் இயக்குனர் விக்ரம் குமார் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஹீரோவாகும் அனிருத்..!

27 வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக என் தந்தை கிட்டத்தட்ட அவரின் ஒரு வருட சம்பளத்தை விமான டிக்கெட்டிற்காக செலவிட்டார்: சுந்தர் பிச்சை!

Today News Tamil – Tamil News Today 10-06-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 10.06.2020 Today Rasi Palan 10-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleநடிகர் ஜெயம் ரவி நடித்த திரைப்படத்தில் சாய் பல்லவி..!