08-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 08-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live

0

Tamil news today 08-06-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 8.6.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 8/6/20, Today News in Tamil 08.06.2020, Today breaking news in tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.

Tamil News Today Sri Lanka

 • கொழும்பு, கம்பஹா உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் இடையிலான போக்குவரத்து சேவையை முன்னெடுக்க அனுமதி பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகள் இன்று முதல் வழமைக்கு திரும்பும்.
 • எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த க.பொ.த. உயர்தர பரீட்சைகளை ஒத்திவைக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. இம்முறை உயர்தரப் பரீட்சையில் 3 லட்சத்து 63 ஆயிரத்து 278 மாணவர்கள் தோற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 • இன்று முதல் நாடாளவிய ரீதியில் தினமும் இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவித்துள்ளது.
 • இலங்கையில் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 1814 ஆக உயர்வு.
 • இன்று முதல் அனைத்து அரச ஊழியர்களையும் பணிக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. அரச ஊழியர்களில் அதிகமானோர் கடந்த 3 மாத காலங்களாக வீட்டில் உள்ளதாகவும் இன்று முதல் பொது போக்குவரத்து சேவை வழமை போன்று இயங்கும் என்பதனால் அரச ஊழியர்களின் போக்குவரத்து தொடர்பில் பிரச்சினை ஏற்படாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tamil News Today India

 • இன்று (திங்கள் கிழமை) முதல் உணவகங்கள், உணவு விடுதிகள் திறக்க தமிழகு அரசு அனுமதி அளித்துள்ளது.
 • காய்ச்சல், இருமல் இருக்கா? அப்ப பஸ்களில் அனுமதியில்லை. எச்சில் துப்பினால் அபராதம். தமிழக அரசு.
 • மகன், மகள், மனைவிக்கும் கொரோனா! ஜெ.அன்பழகன் வீட்டில் கோவிட் கோர தாண்டவம்!
 • கொரோனாவுக்கு திருச்சியில் 2வது பலி..கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திருவள்ளூரைச் சேர்ந்தவர் மரணம்.
 • தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 18 பேர் மரணம்.. 20 வயது இளம் பெண் இறப்பால் அதிர்ச்சி!
 • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 1500ஐ தாண்டிய கொரோனா! சென்னையில் எகிறிய பாதிப்பு!

Tamil News Today World

 • இனவெறிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் குதிரையில் வலம்வந்த பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திட்டமிட்டு வீழ்த்தப்பட்டதாக பொலிஸ் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
 • லண்டனில் பெண்ணொருவரின் கார் மற்றும் வீட்டிலிருந்து பொலிசார் அதிகளவு பணத்தை கைப்பற்றியுள்ள நிலையில் அவர் போதை பொருட்களை கடத்துபவர் என தெரியவந்துள்ளது.

Tamil News Live

 • தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்திற்கு கொரோனா பாசிட்டிவ்? பிரபல நடிகர் போட்ட டுவிட்! இதை ஒரு நகைச்சுக்காக தான் பதிவிட்டேன் என்று கூறி ரசிகர்களிடம் பண்ணிப்பு கேட்டார் நடிகர் ரோஹித் ராய்.
 • தமது இளம் வயதில் பல முறை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இலக்கானதாக ஆர்காவ் மொடல் அஞ்சா லுயன்பெர்கர் முதன் முறையாக மனம் திறந்துள்ளார். இந்த நிகழ்வுகளால் தன்னையே வெறுத்ததாக கூறும் அஞ்சா, அதில் இருந்து விடுபட தமக்கு பல ஆண்டுகள் செலவானது என்றார்.
 • நடிகர் சிம்பு லண்டனில் வசிக்கும் கோடீஸ்வர பெண்ணை திருமணம் செய்யப் போவதாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 • அமெரிக்காவில் கழுத்தை நெரித்து கறுப்பின நபரான‌ ஜார்ஜை கொலை செய்த‌ போலீஸ்காரரின் மனைவி அவரை டைவர்ஸ் செய்ய முடிவெடுத்துள்ளார். அவருக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பியுள்ளார். தன்னுடைய கணவர் செய்த காரியம், தன்னை மனதளவில் அளவுக்கு அதிகமாக பாதித்துவிட்டதாகவும், அதனால் ஆழ்ந்த வேதனைக்கு உள்ளானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Today News Tamil – Tamil News Today 08-06-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 08.06.2020 Today Rasi Palan 08-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleலொஸ்லியா, ஹர்பஜன் நடித்த படம் குறித்து கிரிக்கெட் வீரர் சச்சின் டுவிட்..!