07-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 07-07-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live

0

Tamil news today 07-07-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 07.7.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 07/7/20, Today News in Tamil 07.07.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.

Tamil News Today Sri Lanka

வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் நேரம் நீடிப்பு.. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் வாக்களிக்க முடியும்.

காலிமுகத்திடலில் அடையாளம் தெரியாத சிலரால் தானும் நண்பரும் துன்புறுத்தப்பட்டதாக ரஷ்ய நாட்டுப் பெண்ணொருவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக சுற்றுலாப் பயணிகள் துன்புறுத்தப்படுவதை சகித்துக்கொள்ளப் போவதில்லை – சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.

கொழும்பில் ஒருவரின் வங்கிக் கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை கண்டுபிடிப்பு..குறித்த பணம் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையாளரான மர்வின் ஜானா என்பவருடையது என பொலிஸார் தகவல்.

அரச தரப்பினர் பலமுறை தேர்தல் விதிகளை மீறியுள்ளதாக சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேசத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் தொல்பொருள் செயற்பாட்டுக்கு எதிராக வெல்லாவெளி பிரதேசசபையின் அமர்வில் கண்டனம்..!

“சாக்கடை அரசியலை சுத்தப்படுத்துவதற்காக இளைஞர்கள் களத்தில் இறங்கவேண்டும்” – தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் கருத்து.

வ‌வுனியா, குருமன்காடு சந்திக்கு அருகில் புதிதாக இராணுவச் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளதால் அவ்வீதி வழியாக பயணிக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல்.

யாழ்ப்பாணம் மரியன்னை ஆலயத்தில் (பெரிய கோயில்)சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர் கைது… குறித்த நபர் மன்னார் வங்காலையைச் சேர்ந்த அலோசியஸ் ஸ்டீபன் வாஸ் எனவும் ம‌னநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Tamil News Today India

“ஊரடங்கில் தளர்வுகள் இருந்தாலும் சுய கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும்” – தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

த‌மிழகத்தில் வரும் நவம்பர் மாதம் முதல் ரேசனில் இலவச அரிசி வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு.

கேர்ளா திருவனந்தபுரம் பகுதியில் திங்கட்கிழமை முதல் முழுநேர ஊரடங்கு அமுல்..!

கொரொனா அதிகரித்தமையால் தாஜ்மஹால் திறக்கப்படாது என அறிவிப்பு.

“இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது” – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

“சர்வதேச அரங்கில் இந்தியா மிகவும் பொறுப்புள்ள நாடாக திகழ்கிறது” ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் Tijjani Muhammad-Bande கருத்து.

“ச‌ட்டத்திற்குப் புறம்பான ‘பிரண்ட்ஸ் ஆப் போலிஸ்’ எனும் பிரிவுக்கு தமிழக அரசு நிரந்தர தடைவிதிக்க வேண்டும்” சீமான் கருத்து.!

சாத்தான்குளம் வியாபாரிகளின் குடும்பத்துக்கு சரத்குமார் 5 லட்சம் நிதி உதவி.

மதுரை மாவட்டத்தில் உள்ள ஏகநாதர் சுவாமி சமாதி மடத்தில் சுமார் 2200 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்டெழுத்து கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு.

Tamil News Today World

பிரித்தானியாவில் காட்சியகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பிற கலாச்சார இடங்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, அரசாங்கம் 1.57 பில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ளது.

பிரான்ஸில் கொரோனா வைரஸ் காரணமாக 4 மாதங்களாக முடப்பட்டிருந்த லூவ்ரே (Louvre) அருங்காட்சியகம் மீண்டும் திறக்கப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய இரு அமெரிக்கர்களுக்கு,தலா 1,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிப்பு.

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை எப்படியாவது பூஜ்ஜியத்துக்குக் கொண்டு வந்து விடவேண்டும் என்ற அமெரிக்காவின் முயற்சி தோல்வி அடைந்துவிட்டதாக ஈரான் துணை அதிபர் இஷாக் ஜஹாங்கிரி தெரிவிப்பு.

ஹைட்ராக்சி மருந்தினால் பலன் இல்லை உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

Tamil News Live

தொலைக்காட்சி நடிகர் நிக் கோர்டோ கொரோனா வைரஸால் உயி(ரிழ)ப்பு.

ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது சூப்பர் ஸ்டார் பாடல்..!

ஆர்யா , சாயிஷா நடிப்பில் உருவாகியுள்ள “டெடி” திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்.

இன்று துவக்கம் தங்க பத்திரம் வெளியீடு கிராம் ரூ.4,852 என நிர்ணயம்

Today News Tamil – Tamil News Today 07-07-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 07.07.2020 Today Rasi Palan 07-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 08.07.2020 Today Rasi Palan 08-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!