New year rasi palan 2020 mithunam rasi palangal – Gemini புத்தாண்டு ராசிபலன் மிதுனம் ராசி பலன்கள் 2020 !

0

New year rasi palan 2020 mithunam rasi palangal – Gemini புத்தாண்டு ராசி பலன் ரிஷப ராசி பலன்கள் 2020. புத்தாண்டு பலன்கள் 2020, puthandu rasi palangal, new year rasi palan 2020, mesham, rishabam, mithunam, kadagam, simmam, kanni, thulam, viruchigam, thanushu, magaram, kumbam, meenam rasi palangal 2020, 12 rasikalukkumana varuda palan, vihari varuda tamil panchangam, vihari varuda palangal, tamil calendar 2020, tamil puthandu 2020, today rasi palan. New year rasi palan 2020 mithunam rasi palangal .

New year rasi palan 2020 mithunam rasi palangal:மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

புதன் கிரகத்தை துணையாக கொண்ட மிதுன ராசி அன்பா்களே!
வரும் 2020-ம் ஆண்டில் ஆண்டு கோள் என வர்ணிக்கப்படும் குரு பகவான் திருக்கணிதப்படி 20-11-2020 முடிய சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் , பொருளாதார ரீதியாக உயர்வுகள், கடன்கள் படிப்படியாக குறைய கூடிய வாய்ப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும் சுபகாரியங்கள் கைகூடி வரும், மன மகிழ்ச்சி நிலவும்.

சிலருக்கு புத்திர பாக்கியம் சிறப்பாக அமையும். பொன், பொருள் சேரும். வீடு, வாகனங்கள் வாங்கக் கூடிய அமைப்பு உண்டாகும். பிரிந்த உறவினர்களும் தேடி வரும் நிலைமை ஏற்படும்.சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் சிறப்பாக சரளமாக நடைபெறும். பெரிய முதலீடுகளை நம்பிக்கை உடன் ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். உத்தியோக ரீதியாக எதிர்பாராத உயர்வுகளை அடைவீர்கள்.

திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் சனி அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரித்து இருப்பதனால் உங்களுக்கு அஷ்டமச்சனி நடக்க வாய்ப்பு உண்டு உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் வந்து போகும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாமல் அவதிப்பட வாய்ப்பு உண்டு. தேவையற்ற அலைச்சல் ஏற்படும். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்ளும் போது நிதானமாக செல்வததோடு முடிந்த வரை இரவு பயணங்களை தவிர்ப்பதும் நல்லது.

சர்ப்ப கிரகமான ராகு ஜென்ம ராசியிலும் கேது 7-லும் வரும் 23-09-2020 வரை சஞ்சாரம் செய்வதால் கணவன்- மனைவி இடையே தேவையில்லாத கருத்து வேறுப்பாடுகள் உண்டாகும். விட்டு கொடுத்து செல்வது, பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கூட வீண் சண்டை ஏற்படலாம் என்பதால், உறவினர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளையும் வேலையாட்களையும் அனுசரித்து நடந்தால் நல்லது.

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும் என்பதால்,உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பதும் ,உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சுறுசுறுப்பாக சிறப்பாக செயல்பட்டு வெற்றியினை பெறுவீர்கள். எதிரிகளின் பலம் குறைந்து உங்களின் பலம் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களால் சாதகமானப் பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களால் தேவையற்ற மன கவலை உண்டாகும்.

பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் சிலருக்கு வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும்.குடும்பத்தில் எதிர்பாராத மகிழ்ச்சி தரும் சுபசெய்திகள் வந்து சேரும். திருமண சுபகாரியங்கள் கைகூடி வரும், மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபிட்சமான நிலை இருக்கும். உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கடன் தொல்லைகள் குறையும். பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும். உறவினர்கள் விசயத்தில் கவனமுடன் நடப்பது நன்மை தரும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவா்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியான நிலை இருக்கும்.வேலைபளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு மேலும் ஊக்கத்தை ஏற்படுத்தும்.தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சாதகமானப் பலன்கள் கிடைக்கும். அடிக்கடி ஏற்படும் ஆரோக்கிய பாதிப்பால் வேலையில் சரிவர கவனம் செலுத்த முடியாமல் போகும் என்பதால் முடிந்த வரை சக ஊழியர்களை அனுசரித்து செல்வதும், பெறுப்புகளை குறைத்து கொள்வதும் நன்மை தரும்.

தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் வெளிநாட்டு தொடர்புடையவர்களாலும் லாபகரமான பலன்கள் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும்.நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வேலையாட்களால் சில சில இடையூறுகள் வந்தாலும் எதையும் சமாளித்து லாபங்களை அடைவீர்கள். சோ்ந்து தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது நல்லது.

கொடுக்கல்- வாங்கல் நன்றாக இருப்பதால் பண புழக்கம் சிறப்பாக இருக்கும் காலமாகும், பெரிய அதிகாாிகளின் தொடர்பும் நட்பும் நற்பலனை உண்டாக்கும். காண்டிராக்ட் கமிஷன் ஏஜென்ஸி போன்ற துறைகளில் சிறப்பான லாபம் அமையும். போட்ட முதலீடுகளுக்கு மேலாக லாபத்தை பெற்று மகிழ்வீா்கள் . எதிர்ப்புகள் குறைந்து நற்பலன்களை அடைவீர்கள்.

எதிர்பாராத முக்கிய பதவிகள் தேடி வரும்.மக்களின் ஆதரவைப் பெற புதுபுது முயற்சிகளை கையாள்வீர்கள். கட்சி பணிகளுக்காக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். வீண் வாக்குவாதங்களை தவிா்த்து பேச்சில் நிதானத்தை கடைபிடித்து உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எடுக்கும் காரியங்களில் வெற்றிகளை பெறுவீர்கள்.

நடிப்பு துறையில் உள்ளவர்கள் மட்டுமின்றி இசை, நடனம் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கும் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். திட்டமிட்ட காாியங்கள் திட்டமிட்டபடி நடகடகும். வரவேண்டிய சம்பள பாக்கிகள் தடையின்றி வந்து சேரும்.உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது.

பயிர் விளைச்சல் மிக சிறப்பாக இருக்கும். பூச்சிகளின் தொல்லைகள் சற்று குறைந்து லாபகரமான பலனை அடைவீர்கள். வயல் தோட்டம் மனை வாங்கும் வாய்ப்பும் ஏற்படும். வேலையாட்களின் செயல்கள் உங்கள் மன அமைதியை குறைக்கும். பங்காளிகளிடம் பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது.அரசு வழியில் உதவிகள் கிடைக்கும்.

கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு நிம்மதி குறைவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும்.புத்திர பாக்கியம் உண்டாகும் ஆடம்பரமான செலவுகளை குறைத்துக்கொண்டால் சேமிக்க முடியும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. சுபகாாியங்கள் நடக்கும் புத்திர வழியில் பெருமை அடைவீர்கள்.

கல்வியில் நல்ல ஈடுபாட்டுடன் செயல்பட்டு அதிக மதிப்பினை பெறுவீர்கள்.நினைத்த கல்வியினை தேர்ந்தெடுத்து படிக்க முடியும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது மிக கவனமாக இருப்பது நல்லது. உடன்பயிலும் மாணவர்களின் ஆதரவு கிட்டும் அரசு வழியில் உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது,

2020 இல் எந்த எண் காரர்களுக்கு சனி பகவான் அள்ளிக்கொடுக்கவிருக்கிரார்? யாரை இந்த சக்தி வாய்ந்த சனி ஆட்டிப்படைக்கும்!

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleToday Rasi Palan இன்றைய ராசி பலன் – 08.01.2020 !இன்றைய பஞ்சாங்கம்!
Next articleTamil Piththan Kavithaigal – தமிழ்பித்தனின் கவிதைகள் kavithaigal tamil – kavithai varigal kavithaigal images – 01 தமிழ் பித்தன் கவிதைகள்! எழுத்தாக்கம் தமிழ் பித்தன்!