தற்போது Me too மூலமாக பலரும் பாலியல் குற்றச்சாட்டுக்களை எடுத்து வைத்து வருகிறார்கள். தற்போது பிரபல நடிகர் தலிப் தாஹில் புதுமுக நடிகைக்கு நேர்ந்த தொல்லையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதில் அவர் நான் 25 வருடங்களுக்கு முன் ஹிந்தி படத்தில் நடித்தேன். அப்போது பலாத்கார காட்சியை படமாக்கினார்கள், இயக்குனர் என்னிடம் நடிகையின் ஆடையை கிழித்துவிடுங்கள், ஆனால் அவரிடம் சொல்லாதீர்கள் என சொன்னார். நான் இதை நடிகையின் சம்மதம் இல்லாமல் முடியாது என சொல்லிவிட்டேன்.
அந்த ஹீரோயின் சினிமாவுக்கு புதிது என்பதால் அவரிடம் விஷயத்தை எடுத்து சொன்னேன். அதை கேட்டவுடனேயே அவர் அழுதுகொண்டு அறைக்கு ஓடிவிட்டார். பின் அவரிடம் இயக்குனர் சொன்னது போல் நான் எதுவும் செய்யமாட்டேன் என நடிகையிடன் கூறினேன் என்றார்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: