மாஸ்டர் இசை வெளியீட்டு விழா இங்கு தானாம்! சென்னையில் இல்லை! விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில்!

0
90

தளபதி விஜய் நடிப்பில் விஜய் சேதுபதி வில்லனாக, மாளவிகா மோகன் ஹீரோயினாக கலக்கவிருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்ற வேளையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எங்கு நடைபெறவுள்ளது என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இந்த முறை சென்னையில் நடக்கவில்லையாம். இந்த முறை கோவையில் நடத்த தீர்மானித்துள்ளார்களாம். இருப்பினும் கோவையில் எந்த இடத்தில், எப்போது என்ற தகவல் இதுவரை படக்குழு வெளியிடவில்லை.எவ்வாறு இருப்பினும் விஜய்யின் கோட்டை என்று அழைக்கப்படும் கோவையில் இசை வெளியீட்டு விழா நடத்தப்படவுள்ளது என்பதை அறிந்ததும் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: