January Matha Rasi Palan 2020 தை மாதம் முழுவதும் 12 ராசிகளுக்கும் எப்படி அமைய இருக்கின்றது ! எந்த ராசிக்காரர்களின் வாழ்வு திருப்தியாக அமையும் !

0

மேஷம்: பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு, மாத பிற்பாதியில் 10-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடந்த காலப் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடைகள் விலகி கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் முன்னேற்றமான நிலையினை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 19-01-2020 மாலை 05.47 மணி முதல் 21-01-2020 இரவு 11.43 மணி வரை.

ரிஷபம்: உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய் 8-ல் சூரியன், குரு சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களால் நிம்மதி குறைவுகள், ஆரோக்கிய பாதிப்புகள், பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் போன்றவை ஏற்படும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிக்கல்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியை பெற முடியும். கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எதிலும் பொறுமையாக செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. சிவ வழிபாடு விஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 21-01-2020 இரவு 11.43 மணி முதல் 24-01-2020 காலை 07.39 மணி வரை.

மிதுனம்: உங்கள் ராசியதிபதி புதன் குரு சேர்க்கைப் பெற்று 7-ல் சஞ்சரிப்பதாலும், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நற்பலனை தரும். தாராள தனவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி, சுப காரியங்கள் கைகூடக் கூடிய அமைப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 24-01-2020 காலை 07.39 மணி முதல் 26-01-2020 மாலை 05.39 மணி வரை.

கடகம்: உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் சூரியன், சனி 6-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். உங்களின் பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு யாவும் உயரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் தராள தனவரவுகள் உண்டாவதால் எதையும் சமாளித்து விட முடியும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபங்கள் பெருகும். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம் – 26-01-2020 மாலை 05.39 மணி முதல் 29-01-2020 அதிகாலை 05.29 மணி வரை.

சிம்மம்: உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு, 11-ல் ராகு சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் அற்புதமான அமைப்பாகும். எந்தவிதமான எதிர்ப்புகளையும் சமாளிக்க கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும். பணவரவுகளில் சரளமான நிலை இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி முன்னேற்றமான நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். பயணங்களால் சாதகப்பலனை அடைவீர்கள். சுப முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 01-01-2020 இரவு 09.38 மணி முதல் 04-01-2020 காலை 10.05 மணி வரை மற்றும் 29-01-2020 அதிகாலை 05.29 மணி முதல் 31-01-2020 மாலை 06.09 மணி வரை.

கன்னி: உங்கள் ராசியதிபதி புதன் 4, 5-ல் சஞ்சரிப்பதாலும், 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் உண்டாகும். உடல் அரோக்கியத்தில் சோர்வு ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் செலவுகள் உண்டாகும். பண விஷயத்தில் யாருக்கும் முன் ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் ஏற்படும் என்பதால் பயணங்களில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. சிவனை வழிபடவும்.

சந்திராஷ்டமம் – 04-01-2020 காலை 10.05 மணி முதல் 06-01-2020 இரவு 08.36 மணி வரை மற்றும் 31-01-2020 இரவு 06.09 மணி முதல் 03-02-2020 அதிகாலை 05.40 மணி வரை.

துலாம்: உங்கள் ராசியதிபதி சுக்கிரன் இம்மாதம் 4, 5-ல் சஞ்சரிப்பதாலும், முயற்சி ஸ்தானமான 3-ல் மாத முற்பாதியில் சூரியன், சனி சஞ்சரிப்பதாலும் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பண விஷயங்களில் சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். துர்கையம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம் – 06-01-2020 இரவு 08.36 மணி முதல் 09-01-2020 அதிகாலை 03.49 மணி வரை.

விருச்சிகம்: உங்கள் ராசிக்கு குரு, புதன் தன ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். கடந்த காலத்தில் இருந்த பொருளாதார நெருக்கடிகள், அனைத்தும் விலகி முன்னேற்றமான நிலையைக் கொடுக்கும். பண வரவுகள் சரளமாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். உறவினர்களால் ஓரளவுக்கு அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 09-01-2020 அதிகாலை 03.49 மணி முதல் 11-01-2020 காலை 07.52 மணி வரை.

தனுசு: உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் சுக்கிரன், புதன் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெற்று தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். சிவனை வழிபடுவது சிறப்பு.

சந்திராஷ்டமம் – 11-01-2020 காலை 07.52 மணி முதல் 13-01-2020 காலை 09.55 மணி வரை.

மகரம்: உங்கள் ராசிக்கு ராகு 6-ல், செவ்வாய் 11-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும். வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும் என்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தினை அடைய முடியும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டும். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 13-01-2020 காலை 09.55 மணி முதல் 15-01-2020 காலை 11.28 மணி வரை.

கும்பம்: உங்கள் ராசிக்கு குரு, சனி, கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன், புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் தடைபட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறுசிறு போட்டிகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து ஏற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். முருக வழிபாடு உத்தமம்.

சந்திராஷ்டமம் – 15-01-2020 காலை 11.28 மணி முதல் 17-01-2020 பகல் 01.49 மணி வரை.

மீனம்: பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி, அன்புள்ள மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இம்மாதம் சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் ராகு 4-ல், சனி, கேது 10-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பொன் பொருள் சேரும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை பெற முடியும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் சிறு தடை தாமதம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பது, ஜாமின் கையெழுத்து போடுவது போன்றவற்றை தவிர்ப்பது உத்தமம். மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.

பரிகாரம் – ராகு காலங்களில் அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்தால் குடும்பத்தில் மங்களங்கள் உண்டாகும்.

சந்திராஷ்டமம் – 17-01-2020 பகல் 01.49 மணி முதல் 19-01-2020 மாலை 05.47 மணி வரை.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதிடீர் ராஜயோகம் கூரையை பிச்சிகிட்டு தேடி வரும்? தை மாதம் முழுவதும் சனி பெயர்ச்சியால் இந்த இரண்டு ராசிக்கும் பேரதிர்ஷ்டம்!
Next articleThirukkural Nalam punainthu uraiththal Adhikaram-112 திருக்குறள் நலம்புனைந்துரைத்தல் அதிகாரம்-112 களவியல் காமத்துப்பால் Kalaviyal Kamathupal in Tamil