Coronavirus in Tamil: How to Spread Coronavirus, Novel Coronavirus, கொரோனா வைரஸ் என்றால் என்ன? கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது? தடுப்பது எப்படி? சிகிச்சை என்ன? நோயின் தீவிரம் என்ன? Coronavirus in Tamil. Corona Virus Endral Enna, Corona Virus, Coronavirus Medicine, Coronavirus Diagnosis, Coronavirus Treatment, Coronavirus in China, Coronavirus Symptoms 2020, கரோனா வைரஸ். Corona virus Parriya Thagavalgal, Koronavirus, Novel Cronavirus 2019-nCoV. COVID-19, கோவிட்-19
Coronavirus in Tamil COVID-19: கொரோனா வைரஸ் | கோவிட்-19
தற்போது உலகையே மிரளவைத்துள்ள ஓர் விடயம் என்னவென்றால் அது கொரோனா வைரஸ் தாக்கம் தான். இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக மக்கள் மிகவும் பீதியில் உள்ளனர். இது உயிராபத்தை ஏற்படுத்தும் ஓர் நோய்த்தொற்று என்பதால் இதன் மீது உலக சுகாதார மையம் மற்றும் நாடுகளின் மருத்துவ குழுக்கள் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றன. சீனாவில் இனங்காணப்பட்டுள்ள இந்த வைரஸ் இன்று வரையில் உலகில் பல நாடுகளில் பதிவாகியுள்ளது.
கொரோனா வைரஸ் என்றால் என்ன?
கொரோனா வைரஸ் ஆனது நொவல் கொரோனா வைரஸ் (2019 nCoV) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த வைரசின் தாய் குடும்பமான கொரோனா வைரஸ் குடும்பம் 1961 ஆம் அண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது தடிமலுக்குள்ளாகி இருந்த ஒரு நபரின் நாசித் துவாரங்களில் இருந்து கிடைக்கப்பட்ட மாதிரியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது தான் இந்த வைரஸ் குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் குடும்பத்தில் ஆறு வகையான வைரஸ்கள் மட்டுமே மனிதனைப் பாதிக்கக்கூடியனவாக இருந்தன.
ஆனால் தற்போது அவற்றில் மேலுமொரு வைரஸ் சேரந்து கொண்டுள்ளது. இதுவே த்ற்போது மிகவும் அச்சுறுத்தலாகி மனிதர்களுக்கு பெரும் சவாலாக விளங்குகின்றது. 2019 நொவல் கொரனா வைரஸ் (2019 – nசொவ்) இதுவரை மனிதர்கள் முன்பு இனம் காணப்படாத ஒரு திரிபாக விளங்குகின்றது என உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டிருக்கின்றது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்த வைரஸ் சீனாவில் பல உயிரிளப்புக்களை ஏற்படுத்திவிட்டது. இந்த வைரஸ் மிருகங்களில் இருந்து மனிதனுக்கு கடத்தப்பட்டுள்ளதாக சீன மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர். பாதுகாப்பற்ற முறையில் விலங்குகளுடன் நேரடி தொடர்பை மேற்கொள்வது மற்றும் இறைச்சி, முட்டை போன்றவற்றை நன்கு சமைத்து உண்பது என்பவற்றில் கவனம் செலுத்துமாறு உலக சுகாதார ஸ்தாபனம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் த்ற்போது ஏற்பட்டுள்ள அபாயம் என்னவென்றால் இந்த வைரஸ் தற்போது ஆளுக்காள் பரவும் நிலையை அடைந்துள்ளதாக சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
China coronavirus ‘spreads before symptoms show’ – BBC News
கொரோனா வைரஸ் தொற்றினால் தோன்றும் அறிகுறிகள் என்ன?
தடிமல் போன்ற மேல் சுவாச குழாய் நோய்கள் இலேசாக வெளிப்படலாம்.
கீழ் சுவாசக் குழாயையும் பாதிக்கலாம்.
கடும் இருமல், சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல், சுவாசிப்பதில் சிரமம்
மூக்கிலிருந்து நீர் வடிதல், தலைவலி, இருமல், தொண்டை வலி, உடல் சோர்வான நிலை.
சில சமயம் மூச்சு குழாய் அழற்சி போன்ற கீழ் சுவாச குழாய் நோய்கள்.
சிறுநீரகச் செயலிழப்பும் ஏற்படலாம். இவரை பெரும்பாலும் உயிரிழப்புக்கு வழிவகுக்கலாம்.
நோய் தீவிரம் அடைந்தால் நிமோனியா, மூச்சு குழாய் அழற்சி ஏற்பட்டு ஈரல் பலவீனமடையலாம். 2019-nCoV வைரஸ் முதலில் மனிதர்களின் நுரையீரலை தாக்கக்கூடும்.
போன்ற நோய் அறிகுறிகளும் வெளிப்படுகின்றன என்று சீனாவின் சுகாதார தேசிய ஆணைக்குழு தெரிவித்திருக்கின்றது.
Coronavirus in China, Coronavirus in Australia, Coronavirus in Cambodia, Coronavirus in Canada, Coronavirus in France, Coronavirus in Germany, Coronavirus in Japan, Coronavirus in Malaysia, Coronavirus in Nepal, Coronavirus in Singapore, Coronavirus in South Korea, Coronavirus in Taiwan, Coronavirus in Thailand, Coronavirus in United States, Cronavirus in Vietnam and Cronavirus in Sri Lanka
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பித்துக்கொள்வது எப்படி?
கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு தொற்றிக்கொள்ளும் என்பதால் தேகாரோக்கியம் கொண்டவர்கள் இந்நோய் தொற்று உள்ளானவர்களுடன் நெருக்கமான தொடர்பை தவிர்க்க வேண்டும்.
தொற்றுள்ள நபர்களின் அருகில் இருத்தல், தொடுதல், பொருட்களை பயன்படுத்தல் என்பவற்றை தவிர்த்தல் வேண்டும். ஏனென்றால் இது புதிதாக இனங்காணப்பட்டுள்ள வைரஸாக விளங்குவதால் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான அல்லது தவிர்த்துக் கொள்வதற்கான எந்தவொரு விஷேட மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ கிடையாது. இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கோ அல்லது தவிர்த்துக் கொள்வதற்கோ தடுப்பு மருந்துகளையோ அல்லது மாத்திரைகளையோ கண்டுபிடித்து புழக்கத்திற்கு விட சிறிது காலம் எடுக்கும் என்பதால் இது உயிராபத்தை விளைவிக்க கூடிய தொற்று என்பதாலும் கவனமுடன் செயல்படுவது நம் ஒவ்வொருவரதும் கடமையாகும்.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கள் பற்றிய தொகுப்பு.
சீனாவில் இதுவரை 3000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் 80 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இன்னும் உயிரிழப்புக்கள் நடந்து கொண்டு இருப்பதால் சரியான கணக்கு சொல்ல முடியவில்லை. 11 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட சீனாவின் வுஹான் நகரில் இந்த வைரஸ் பாதிப்பு முதலில் ஏற்பட்டது. இதன்காரணமாக அங்கு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், போதிய இடமும், மருந்துகளும் இன்றி மருத்துவமனைகள் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இதன் காரணமாக நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக சீனவின் நகரமான வுஹானில் ஆறு நாட்களில் மருத்துவமனை ஒன்றை உருவாக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மனிதர்கள் இதுவரை கண்டிராத இந்த வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் சீன அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் தற்போது அமெரிக்கா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. ஆனாலும் 2019-nCoV என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் சீனாவில் இருந்து பரவினாலும், இதன் மூலம் எது என்று இதுவரை அடையாளம் காணமுடியவில்லை.
கொரோனா வைரஸ் பற்றிய பல வதந்திகள் பரவுவதால் அதிகார பூர்வமற்ற எந்த தகவல்களையும் நம்பாமல் இருக்கவும். மூட நம்பிக்கைகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்பட்டு எமக்கு மட்டுமன்றி அயலவர்கள் மட்டிலும் பொறுப்புடன் செயல்படுவோம்.
Patti Vaithiyam in Tamil with the all maruththuva Kurippukkal: Siddar Maruththuvam, Paati Vaithiyam Tamil Maruththuvam
Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)
நன்றி
தொகுப்பு: By: Tamilpiththan