ஆகஸ்ட் மாத ராசி பலன் August Matha Rasi Palan 2020 ஆவணி மாத ராசி பலன் Aavani Matha Rasi Palan monthly Rasi Palan in Tamil.

0

August Matha Rasi Palan 2020 ஆகஸ்ட் மாத ராசி பலன் ஆவணி மாத ராசி பலன் Aavani Matha Rasi Palan monthly Rasi Palan in Tamil. August Matha Rasi Palan 2020 ஆங்கில மாத ராசி பலன்கள் August Matha Suba Muhurtha Naatkal 2020 தமிழ் காலண்டர் 2020 ஆகஸ்ட் Chandrashtama Days August 2020 Tamil Calendar August 2020 !

August Matha Rasi Palan 2020

மேஷம்

சுக ஸ்தானமான 4-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புக்கள் தோன்றி மறையும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. கொடுத்த வாக்குறுதிகளை ஒரளவுக்கு காப்பாற்றி விட முடியும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அசையா சொத்துகளால் சுப செலவுகள் ஏற்படும். சிவபெருமானையும் முருக பெருமானையும் வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் – 25-08-2020 காலை 08.15 மணி முதல் 27-08-2020 பகல் 12.38 மணி வரை.

ரிஷபம்

இம்மாத முற்பாதியில் 3-ல் சூரியன் 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். எதையும் சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய ஆற்றல் உண்டாகும். வம்பு வழக்குகளில் வெற்றி கிட்டும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். ராகு 2-ல், கேது 8-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றங்களால் நிம்மதி குறைவு ஏற்பட்டாலும் அதன் மூலம் பொருளாதார உயர்வுகளை அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். மகாலட்சுமி தேவியை வழிபடவும்.

சந்திராஷ்டமம் – 27-08-2020 பகல் 12.38 மணி முதல் 29-08-2020 இரவு 07.13 மணி வரை.

மிதுனம்

உங்கள் ராசிக்கு 10, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் உன்னதமான அமைப்பாகும். உங்களது பலமும் வளமும் கூடும். பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் நடந்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது, தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். துர்க்கையம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம் – 02-08-2020 பகல் 12.55 மணி முதல் 04-08-2020 இரவு 08.45 மணி வரை மற்றும் 29-08-2020 இரவு 07.13 மணி முதல் 01-09-2020 அதிகாலை 03.49 மணி வரை.

கடகம்

ஜென்ம ராசியில் சூரியன், 6-ல் குரு சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். முன்கோபத்தையும் பேச்சையும் குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்பட்டால் ஒரளவுக்கு நற்பலனை பெற முடியும். குடும்பத்தில் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படும். 6-ல் கேது, 9-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் சிக்கல்கள் குறையும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கெடுபிடிகள் அதிகரிக்கும். வீண் பழிகளை சுமக்க கூடிய காலம் என்பதால் எதிலும் கவனம் தேவை. சிவ வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 04-08-2020 இரவு 08.45 மணி முதல் 07-08-2020 காலை 06.58 மணி வரை.

சிம்மம்

உங்கள் ராசிக்கு சனி 6-ல், சுக்கிரன், ராகு 11-ல் சஞ்சரிப்பதாலும், குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். பொருளாதார மேன்மை, நினைத்தது நிறைவேறக் கூடிய வாய்ப்பு ஏற்படும். மாத முற்பாதியில் 8-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. நெருங்கியவர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வதால் அனுகூலப் பலனை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில் நடைபெறும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். விநாயக பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 07-08-2020 காலை 06.58 மணி முதல் 09-08-2020 இரவு 07.05 மணி வரை.

கன்னி

உங்கள் ராசிக்கு சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதும் சூரியன் லாப ஸ்தானத்தில் மாத முற்பாதியில் சஞ்சரிப்பதும் ஏற்றமிகுந்த பலன்களை தரும் அமைப்பாகும். பணவரவுகள் தாராளமாக அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்குவதில் சிறு தடைக்குப் பின் அனுகூலப் பலன் உண்டாகும். செவ்வாய் 7, 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தொழிலில் போட்டிகள் அதிகரித்தாலும், எதையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். முருக வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 09-08-2020 இரவு 07.05 மணி முதல் 12-08-2020 காலை 07.35 மணி வரை.

துலாம்

உங்கள் ராசியதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதார ரீதியாக வலமான பலன்கள் உண்டாகும். உங்களுக்குள்ள பிரச்சினைகள் யாவும் ஒரு முடிவுக்கு வரும். சமுதாயத்தில் பெயர், புகழ் உயரும். பணவரவுகள் சரளமாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு ஏற்படும். துர்க்கை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 12-08-2020 காலை 07.35 மணி முதல் 14-08-2020 மாலை 06.05 மணி வரை.

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு தனக்காரகன் குரு பகவான் 2-ல் சஞ்சரிப்பதும், இம்மாதத்தில் சூரியன் 9, 10-ல் சஞ்சரிப்பதும் நல்லது என்பதால் அனுகூலங்கள் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். எதையும் சமாளித்து ஏற்றமானப் பலனை பெறுவீர்கள். சுக்கிரன், ராகு 8-ல் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வதன் மூலம் எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்கும். பயணங்கள் அலைச்சலை ஏற்படுத்தும் என்றாலும் அதன் மூலம் அனுகூலங்களை அடையலாம். முருக பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 14-08-2020 மாலை 06.05 மணி முதல் 17-08-2020 அதிகாலை 00.50 மணி வரை.

தனுசு

ஜென்ம ராசியில் குரு மாத முற்பாதியில் 4-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உடல் சோர்வு ஏற்படலாம் என்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உணவு விஷயத்தில் கவனமுடன் இருப்பது சிறப்பு. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பண வரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து நடப்பது உத்தமம். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் சற்றே மந்த நிலை உண்டாகும். சிவ வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 17-08-2020 அதிகாலை 00.50 மணி முதல் 19-08-2020 அதிகாலை 04.10 மணி வரை.

மகரம்

உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் செவ்வாய் 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் இருக்கும் என்றாலும் சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பொருளாதார நிலையானது ஒரளவுக்கு சிறப்பாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கல் விஷயங்களில் சற்றுக் கவனமுடன் இருந்தால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். முடிந்த வரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடக்கப் பழகிக் கொண்டால் நற்பலன்களை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரித்தாலும் லாபங்கள் தடைப்படாது. சிவ வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 19-08-2020 அதிகாலை 04.10 மணி முதல் 21-08-2020 அதிகாலை 05.15 மணி வரை.

கும்பம்

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன், 11-ல் கேது சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் நல்லது என்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றத்தை அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் உள்ள பாதிப்புகள் படிப்படியாக குறையும். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம். முருகரையும் ஆஞ்சநேயரையும் வழிபடவும்.

சந்திராஷ்டமம் – 21-08-2020 அதிகாலை 05.15 மணி முதல் 23-08-2020 காலை 06.05 மணி வரை.

மீனம்

உங்கள் ராசிக்கு சுக்கிரன் 4-லும், மாத பிற்பாதியில் சூரியன் 6-லும் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் குறையும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொண்டால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகளில் தடை இருக்காது. போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெற முடியும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. துர்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 23-08-2020 காலை 06.05 மணி முதல் 25-08-2020 காலை 08.15 மணி வரை.

ஆவணி மாத‌ சுப முகூர்த்த நாட்கள் – Suba Muhurtha Naatkal

  • தமிழ் மாதம் ஆவணி 5ம் நாள்‍ 21/08/2020 வெள்ளிக்கிழமை திதி திரிதியை நட்சத்திரம் உத்திரம் வளர்பிறை
  • தமிழ் மாதம் ஆவணி 7ம் நாள்‍ 23/08/2020 ஞாயிறுக்கிழமை திதி பஞ்சமி நட்சத்திரம் சித்திரை வளர்பிறை
  • தமிழ் மாதம் ஆவணி 8ம் நாள்‍ 24/08/2020 திங்கள்கிழமை திதி சஷ்டி நட்சத்திரம் சுவாதி வளர்பிறை
  • தமிழ் மாதம் ஆவணி 12ம் நாள்‍ 28/08/2020 வெள்ளிக்கிழமை திதி தசமி நட்சத்திரம் மூலம் வளர்பிறை
  • தமிழ் மாதம் ஆவணி 14ம் நாள்‍ 30/08/2020 ஞாயிறுக்கிழமை திதி துவாதசி நட்சத்திரம் உத்திராடம் வளர்பிறை
  • தமிழ் மாதம் ஆவணி 15ம் நாள்‍ 31/08/2020 திங்கள்கிழமை திதி திரையோதசி நட்சத்திரம் திருவோணம் வளர்பிறை

ஆவணி மாத சிறப்பு நாட்கள்

பிலிப்பீனிய மொழிகள் மாதம்
ஆவணி 5 – நண்பர்கள் நாள்
ஆவணி 6 – ஹிரோசிமா நாள்
ஆவணி 6 – யமேக்கா விடுதலை நாள்
ஆவணி 9 – நாகசாகி நாள்
ஆவணி 9 – சிங்கப்பூர் விடுதலை நாள்
ஆவணி 12 – உலக இளைஞர்கள் நாள்
ஆவணி 13 – பன்னாட்டு இடதுகை பழக்கமுள்ளவர்கள் நாள்
ஆவணி 14 – பாக்கித்தான் விடுதலை நாள் (1947)
ஆவணி 15 – இந்தியாவின் விடுதலை நாள் (1947)
ஆவணி 15 – கொரியாவின் விடுதலை நாள்
ஆவணி 19 – சர்வதேச புகைப்பட நாள்
ஆவணி 29 – இந்திய தேசிய விளையாட்டு நாள்
ஆவணி 31 – மலேசியாவின் விடுதலை நாள்
ஆவணி முதல் வாரம் – உலக தாய்ப் பாலூட்டல் வாரம்
ஆவணி நடு வாரம் வால்மழையின் உச்சம்.

August Matha Rasi Palan 2020, ஆகஸ்ட் மாத ராசி பலன், ஆவணி மாத ராசி பலன், Aavani Matha Rasi Palan, Monthly Rasi Palan August, monthly Rasi Palan in Tamil, Monthly Horoscope in Tamil. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். August Matha Rasi Palan 2020.

ராசி பலன் ஜோதிடம்

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 30.07.2020 Today Rasi Palan 30-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 31.07.2020 Today Rasi Palan 31-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!