Today Special Historical Events In Tamil | 02-04 | April 02
April 02 Today Special | April 02 What Happened Today In History. April 02 Today Whose Birthday (born) | April-2nd Important Famous Deaths In History On This Day 02/04 | Today Events In History April 2nd | Today Important Incident In History | சித்திரை 02 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 02-04 | சித்திரை மாதம் 02ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 02.04 Varalatril Indru Nadanthathu Enna| April 02 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 02/04 | Famous People Born Today 02.04 | Famous People died Today 02-04.
Today Special in Tamil 02-04
Today Events in Tamil 02-04
Famous People Born Today 02-04
Famous People died Today 02-04
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 02-04 | April 02
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 02-04 | April 02
1513ல் எசுப்பானிய நாடுகாண் பயணி உவான் போன்சி டெ லெயோன் புளோரிடாவை (இன்றைய அமெரிக்க மாநிலம்) முதற்தடவையாகக் கண்டார்.
1755ல் பிரித்தானியக் கடற்படைத்தளபதி வில்லியம் ஜேம்சு இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள மராத்தர்களின் பொற்கோட்டையைக் கைப்பற்றினார்.
1800ல் பைசாந்தியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் முதலாவது தன்னாட்சியுரிமை கொண்ட கிரேக்க மாநிலம் செப்டின்சுலார் குடியரசு கான்ஸ்டண்டினோபில் உடன்பாடு மூலம் அமைக்கப்பட்டது.
1800ல் லுடுவிக் வான் பேத்தோவன் தனது முதலாவது சிம்பொனியை வியன்னாவில் அரங்கேற்றினார்.
1801ல் பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரித்தானியக் கடற்படை தென்மார்க்குக் கடற்படைக் கப்பற்தொகுதியைக் கைப்பற்றியது.
1851ல் நான்காம் இராமா தாய்லாந்தின் மன்னராக முடிசூடினார்.
1863ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: வர்ஜினியாவில் ரிச்மண்ட் நகரில் உணவுப் பற்றாக்குறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கும் அதிகமான பெண்கள் அமெரிக்கக் கூட்டமைப்புக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
1865ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜெபர்சன் டேவிஸ் மற்றும் அவரது அமைச்சர்கள் கூட்டமைப்பின் தலைநகர் ரிச்மண்ட்டை விட்டுப் புறப்பட்டனர்.
1900ல் புவேர்ட்டோ ரிக்கோவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சி வழங்கும் தீர்மானம் அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
1902ல் உருசியப் பேரரசின் உட்துறை அமைச்சர் திமீத்ரி சிப்பியாகின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் படுகொலை செய்யப்பட்டார்.
1902ல் ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது முழுநேரத் திரையரங்கு கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் திறக்கப்பட்டது.
1911ல் ஆத்திரேலியாவில் முதலாவது தேசிய மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
1912ல் டைட்டானிக் கப்பல் தனது முதலாவது கடற்பயண ஒத்திகையை ஆரம்பித்தது.
1917ல் முதல் உலகப் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ஊட்ரோ வில்சன் செருமானியப் பேரரசு மீது போர்ப் பிரகடனத்தை அறிவிக்க சட்டமன்றத்தில் ஆணை கேட்டார்.
1921ல் இன்றைய ஈரானை அமைப்பதற்கான கொரசான் இராணுவ அரசு நிறுவப்பட்டது.
1930ல் செவ்தித்து பேரரசி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து முதலாம் ஹைலி செலாசி எத்தியோப்பியாவின் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.
1972ல் 1950களில் கம்யூனிஸ்டாக அறிவிக்கப்பட்ட பின்னர் நடிகர் சார்லி சாப்ளின் முதற்தடவையாக அமெரிக்கா திரும்பினார்.
1975ல் வியட்நாம் போர்: வட வியட்நாமியப் படையினரின் ஊடுருவலை அடுத்து பல்லாயிரக்கணக்கானோர் ஏதிலிகளாக குவாங்கு காய் மாகாணத்தை விட்டு வெளியேறினர்.
1976ல் இளவரசர் நொரடோம் சீயனூக் கம்போடியத் தலைவர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
1979ல் சோவியத், சிவெர்திலோவ்சுக் நகரில் உள்ள உயிரி-ஆயுத ஆய்வுகூடத்தில் தவறுதலாக ஆந்த்ராக்ஸ் நுண்ணுயிரிகள் வெளியேற்றப்பட்டதால் 66 பேர் உயிரிழந்தனர், கணக்கிலடங்கா உயிரினங்கள் கொல்லப்பட்டன.
1982ல் போக்லாந்து போர்: போக்லாந்து தீவுகள் மீது அர்கெந்தீனா போர் தொடுத்தது.
1983ல் யாழ்ப்பாணம் அரச அதிபரின் செயலகத்தில் விடுதலைப் புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தினர்.
1984ல் ராகேஷ் சர்மா சோயூஸ் டி-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
1989ல் கியூபாவுடனான உறவுகளை சீர் செய்யும் நோக்கில் பிடல் காஸ்ட்ரோவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் கியூபாவின் அவானா நகரை வந்தடைந்தார்.
1992ல் யுகொசுலாவியாவின் பிசெல்சினா நகரில் 42 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
2002ல் இசுரேலியப் படைகள் பெத்லகேம் பிறப்பிடத் தேவாலயத்தைச் சுற்றிவளைத்ததை அடுத்து, பாலத்தீனப் போராளிகள் அங்கிருந்து விலகினர்.
2006ல் அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தில் வீசிய சுழற்காற்றினால் 29 பேர் உயிரிழந்தனர்.
2007ல் சொலமன் தீவுகளுக்கு அண்மையில் கடலின் அடியில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக எழுந்த ஆழிப்பேரலை இத்தீவுகளில் பலத்த சேதத்தை உண்டுபண்ணியது. 8 பேர் வரையில் உயிரிழந்தனர்.
2007ல் ஆப்கானித்தானில் இடம்பெற்ற பெரும் வெள்ளப்பெருக்கினால் 512 பேர் கொல்லப்பட்டனர்.
2011ல் மும்பையில் துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையை 6 இழப்புகளால் வென்று உலகக் கோப்பையைப் பெற்றது.
2012ல் கலிபோர்னியாவில் ஒயிக்கோசு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டனர், மூவர் காயமடைந்தனர்.
2014ல் அமெரிக்காவில் டெக்சசு மாநிலத்தில், இராணுவ முகாம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டனர், 16 பேர் காயமடைந்தனர்.
2015ல் கென்யாவின் கரிசா பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 148 பேர் கொல்லப்பட்டனர்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 02-04 | April 02
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 02-04 | April 02
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan