Agathi Keerai Benefits அகத்தி கீரை பயன்கள் Agathi Keerai Health Benefits அகத்தி கீரை மருத்துவ பயன்கள் Agathi Keerai in English Vegetable Hummingbird. agathi keerai payangal, agathi keerai maruththuva payangal, அகத்தி கீரை தீமைகள் (agathi keerai theemaigal) , அகத்தி கீரை பொடி ( agathi keerai podi) agathi keerai siddha maruthuvam, agathi keerai patti vaithiyam, agathi keerai mooligai, agathi keerai iyarkai maruthuva and agathi keerai nattu maruthuvam.
agathi keerai benefits
மருந்திடுதல் போகுங்காண் வன்கிரந்தி – வாய்வாம்
திருந்த அசனம் செரிக்கும் – வருந்தச்
சகத்திலெழு பித்தமது சாந்தியாம் நாளும்
அகத்தியிலை தின்னு மவர்க்கு”
என்கிறது சித்தர் பாடல்..
அகத்தி இது ஒரு மருந்து முறிவு கீரையாகும். அதாவது ஏற்கனவே ஏனைய நோய்களுக்கு மருந்து எடுப்பவர்கள் அகத்திக்கீரையை உண்ணக் கூடாது என கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகின்றனர்.
விசேட குறிப்பு : அகத்திக் கீரையை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தவும். ஏனெனில், இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் ரத்தம் கெட்டுப்போகவும் வாய்ப்பு உள்ளது.
அகத்திக்கு, அகத்தியம், அச்சம், நுனி, காரம் என்ற வேறு பெயர்களும் மட்டுமன்றி “அகத்தியம்”, “முனி விருட்சம்”, “வக்கிரபுஷ்பம்” என்ற பெயர்களும் உண்டு. இதில், அகத்தியம் மற்றும் முனிவிருட்சம் என்ற பெயர்கள், அகத்திமரமானது வானத்தில் அகத்திய முனிவாரின் நட்சத்திரம் தோன்றுகின்ற காலகட்டத்தில் பூக்கத் தொடங்குகின்ற காரணத்தினால் ஏற்பட்டது என்றும் கூறுவர்.
அகத்திக் கீரை ஜூஸ்
அகத்திக் கீரை சாறுடன் சிறிதளவு தேன் கலந்து உச்சந்தலையில் தடவினால் நீர்க்கோவை பிடித்துள்ள குழந்தைகள் விரைவில் குணமடைவர்.
தொண்டைகளில் தோன்றும் தொண்டை புண் மற்றும் தொண்டை வலி ஆகிய பிரச்சனைகளிலிருந்து விரைவில் விடுபடுவதற்கு அகத்தி கீரையை தினமும் பச்சையாக மென்று உண்ணுதல் வேண்டும்.
சித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக கூறுகிறதுடன், இம்மரத்தின் பல பகுதிகள் மூலிகையாகப் பயன்படுகின்றது என்பது இங்கு குறிப்பிடதக்கது. குறிப்பாக தமிழ்நாடு உட்பட தென்னிந்தியாவிலுள்ள வீடுகளில் சமையலில் அகத்திக்கீரை மற்றும் அகத்தியின் பூவும் பெருமளவில் சமைத்து உண்ணப்படுகின்றது.
அகத்தி கீரையில் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு அவசியமான சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளது.
தொண்டை புண் மற்றும் தொண்டை வலியினால் கஸ்ரப்படுபவர்கள் அகத்தி கீரையை பச்சையாக மென்று உண்ணும் போது விரைவில் தொண்டை பிரச்சினை தீரும்.
மேலும், அகத்தி கீரை வயிற்றில் உள்ள புழுக்களைக் கொல்லுவதோடு மலச்சிக்கல் பிரச்சினையையும் தீர்க்கும்.
பித்த நீரினை வெளியகற்றுவதற்கு அகத்திக் கீரை சாற்றில் சிறிது உப்பு சேர்த்துக் குடித்து வருதல் வேண்டும். இதன்போது வாந்தி ஏற்பட்டு உடலில் உள்ள பித்தத்தின் அளவு குறையும். இதனைவிட அகத்தி கீரையை அரைத்து ஆறாத நெடுநாள் புண்கள் மீது தடவினால் அவை விரைவில் மாறிவிடும்.
உடல் உஷ்ணத்தைக் குறைக்கவும், இளநரை ஏற்படுவதை தவிர்க்கவும் அகத்திக் கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் வேண்டும்;.
அகத்தி கீரையின் சாற்றை பிழிந்து ரத்த கசிவு ஏற்படும் இடங்களில் இடுவதன் மூலம் ரத்தம் வருவது கட்டுப்படுத்தப்பட்டு விரைவில் அவை மாறிவிடும்;.
உயர்ந்த இரத்த அழுத்த
பிரச்சனையில் தவிப்பவர்கள் வாரத்திற்கு ஒருமுறை அகத்தி கீரையை உணவில் சேர்த்து உண்பதினால் இந்த பிரச்சனையிலிருந்து விரைவில் விடுபட முடியும்.இதில் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு அவசியமான் சுண்ணாம்பு சத்து அதிகளவில் காணப்படுகின்றது. மேலும், இதன் இலைகளை நன்கு காயவைத்து, தூளாக்கி, அப்பொடியில் அரைக் கரண்டி அளவு பாலில் கலந்து நாளொன்றக்கு இருவேளை அதாவது காலை மற்றும் மாலை குடித்து வந்தால் வயிற்றுவலி குணமாகும்.
அகத்திக் கீரையில் அனைத்து பகுதிகளும் அதாவது இலை, பூ, காய், பட்டை மற்றும் வேர் ஆகிய அனைத்து பகுதிகளுமே மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. இக்கீரையை உணவாக உண்பதால் காய்ச்சலைக் குறைத்து உடல்சூடு சமப்படுத்தப்படுவதுடன், குடல்புண், அரிப்பு மற்றும் சொறிசிரங்கு போன்ற தோல் நோய்களும் குணமடையும்.
மலச்சிக்கல் தொல்லை நீங்க இதன் பூவைச் சமைத்து உண்டுவருதல் வேண்டும். மேலும், அகத்தி இலைச்சாற்றை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் ஒரு மாத காலம் குடித்து வரும்போது இருமல் குறைவடையும்.
அகத்தி கீரை சாற்றினை சேற்று புண்களில் தடவி வரம் போது சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும்.
அகத்தி கீரையீன் இலை
யினை தேங்காய் எண்ணையில் வதக்கி, அதனை நன்கு பட்டு போல அரைத்து பூசி வரும் போது உடம்பில் காணப்படும் தேமல் முற்றிலுமாக மறையும்.அகத்திக் கீரையில் 8.4 விழுக்காடு புரதம், 1.4 விழுக்காடு கொழுப்பு, 3.1 விழுக்காடு தாது உப்பு மற்றும் காபோகைதரேற், இரும்புச் சத்து, வைட்டமின் (உயிர்ச்சத்து) ஏ என்பன உள்ளதாக் கண்டறிந்துள்ளனர்.
தொண்டைப் புண் மற்றும் தொண்டைவலிக்கு அகத்திக் கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்கும் போது இந்நோய்கள் விலகும். அதேபோல, அகத்திக்கீரையை உண்பதனால் இரத்தப் பித்தம் மற்றும் இரத்த கொதிப்பு ஆகியனவும்; அகலும்.
வயிற்றுவலியிலிருந்து விடுபடுவதற்கு அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு கரண்டி சாற்றோடு, அதே அளவு தேன் கலந்து பருகுதல் வேண்டும்.
இதனைவிட, அகத்தி கோழி மற்றும் மாடு போன்ற கால்நடைகளுக்குத் தீவனமாகவும் பயன்படுத்தப்படுகின்றது.
அகத்தி இலையிலிருந்து ஒரு வகையான தைலம் தயாரிக்கப்படுகிறதுடன், அகத்தியின் பட்டையும் வேரும் மருந்துப்பொருள்களாகப் பயன்படுகின்றன.
கரும்பட்டை, தேமல், சொறி, சிரங்கு போன்றவற்றினால் அவஸ்தைக்கு உள்ளாகியிருப்பவர்கள் அகத்திக் கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, அச்சாற்றில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து அவை உள்ள இடங்களில் பற்றுப்போட்டால் அவை முழுமையாக குணமடையும்.
அகத்தி மரக்குச்சிகள் வீட்டின் கூரை வேய்வதற்குப் பயன்படுகிறதுடன், அகத்தியின் வேரிலிருந்தும் பட்டையிலிருந்தும் உரித்தெடுக்கப்படும் ஒரு வகையான நார் மீன் பிடி வலைகளுக்குப் பயன்படுகிறமை குறிப்பிட தக்க ஓர் அம்சமாகும்.
சிறிதளவு அகத்தி கீரையின் சாற்றை படர் தாமரை உள்ள இடங்களில் பூசி வருவதன் மூலம் அதிலிருந்து விரைவில் முழுமையாக குணமடைய முடிவதுடன், மூக்கின் மேற்பகுதிகளில் தோன்றும் அலற்சி, எரிச்சல், வலிகள், அடைப்பு போன்றவ்றறிற்கும் இதன் ஒரு சொட்டு சாற்றினைத் தடவி வருவதல் சிறப்பான மருந்தாக உள்ளது.
அகத்திப்பட்டை தோல் தொழிலுக்குப் பயன்படுத்தப்படுகின்றதுடன், அகத்திப் பட்டையின் சாறு சிரங்குக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றது.
கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புகள் குணமாக அகத்திக் கீரை, மருதாணி இலை மற்றும் மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துத் அவற்றின் மீது தடவவருதல் சிறப்பான பலனைத் தரும்.
மார்பில் ஏற்படும் வலி நீங்குவதற்கு அகத்திக் கீரையை வெயிலில் நன்கு காய வைத்து இதனைத் தூளாக்கி பாலில் கலந்து குடித்து வருதல் வேண்டும். மேலும், நினைவாற்றலை அதிகரிப்பதற்கு அகத்திக் கீரையை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வருதல் போதுமானது.
இதன் வேர், மூட்டுவலிக்கு மருந்தாக அரைத்துப் பயன்படுத்தப்படுகின்றது. மேலும், பொம்மை செய்யவும் வெடிமருந்து செய்யவும் வெண்மை நிற அகத்தி மரம் பயன்படுத்தப்படுகின்றது.
வெற்றிலைக் கொடிக்கால்களில் வெற்றிலைக் கொடி படரவும் மிளகுத்தோட்டத்தில் மிளகுக்கொடி படரவும் அகத்தி மரம் பயன்படுகின்றது என்பது ஒரு சிறப்பம்சமாகும்.
Patti Vaithiyam in Tamil with the all maruththuva Kurippukkal: Siddar Maruththuvam, Paati Vaithiyam Tamil Maruththuvam
Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)
Article By: Tamilpiththan