அறிகுறிகள்: உயர் இரத்த அழுத்தம்.
தேவையானவை: எலுமிச்சைச்சாறு, கறிவேப்பிலை.
செய்முறை: கறிவேப்பிலைகளை நீர் சேர்த்து அரைத்து சாறு எடுத்து அதனுடன் சிறிது எலுமிச்சைச்சாறு சேர்த்து காலையில் குடித்து வர உயர் இரத்த அழுத்தம் குறையும்.
அறிகுறிகள்: மயக்கம், தலை வலி, உயர் இரத்த அழுத்தம்.
தேவையானவை: கடுக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, சர்பகந்தா வேர், நெல்லிக்காய் பொடி.
செய்முறை: சர்பகந்தா செடியின் வேரை உலர்த்தி பொடி செய்து ஒரு கிராம் அளவு எடுத்து சம அளவு நெல்லிக்காய் பொடி, கடுக்காய் பொடி மற்றும் தான்றிக்காய் பொடி ஆகியவற்றை நன்றாக கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.
அறிகுறிகள்: அதிக இரத்த அழுத்தம்.
தேவையானவை: முருங்கைக் கீரை, சீரகம், தேன்.
செய்முறை : முருங்கைக் கீரைச் சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலையும் மாலையும் 2 கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.