Home thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal சுழிபுரம் சிறுமி றெஜினா கொலையாளிகள் தொடர்பில் வெளியான புதுத் தகவல் !

சுழிபுரம் சிறுமி றெஜினா கொலையாளிகள் தொடர்பில் வெளியான புதுத் தகவல் !

0
466

சுழிபுரம் சிறுமி கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சிலர் இன்னமும் கைது செய்யப்படாமையால் சுதந்திரமாக நடமாடி திரிவாதாக சிறுமியின் உறவினர்கள் குற்றம் சாட்டுவதாக அவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்தார்.

குறித்த வழக்கு விசாரணையானது மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று நீதவான் ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

இந்த விசாரணையின் போது, இந்த சம்பவம் தொடர்பில் சிறுவன் ஒருவன் கூறிய விடயம் தொடர்பில் மன்றில் சட்டத்தரணி முன்வைத்திருந்தார்.,

மேலும் இக்கொலை தொடர்பில் உரிய விசாரணைகளை துரித கதியில் மேற்கொண்டு வெளியில் சுதந்திரமாக நடமாடி திரியும் குற்றவாளிகளை பொலிஸார் விரைந்து கைது செய்ய வேண்டும் எனவும் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனை ஆராய்ந்த நீதிமன்றம் குறித்த வழக்கு தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவுறுத்தியதுடன் குறித்த வழக்கினை எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்.

Previous articleஏ ஆர் முருகதாஸ் ஜி. ஞாபகம் இருக்கா கிரீன் பார்க் ஹோட்டல்…அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி டிவிட்!
Next articleதாய்லாந்தில் குகையில் நடந்த போராட்டத்தில் ரியல் ஹீரோவாக செயல்பட்ட அகதி சிறுவன்: கொண்டாடும் மக்கள்!