கால் மேல் கால் போட்டு உட்காரக்கூடாது! என்று நம்ம வீட்டுப் பெரியவங்க அடிக்கடி சொல்லுறாங்களே! அது ஏன் என்று கேட்கிறீர்களா!!

0

கால் மேல் கால் போட்டு உட்காரக்கூடாது! என்று நம்ம வீட்டுப் பெரியவங்க அடிக்கடி சொல்லுறாங்களே! அது ஏன் என்று கேட்கிறீர்களா!!

பொதுவாக கால் மேல் கால் போட்டு உட்காராதே, இது என்ன கெட்ட பழக்கம்? என்றெல்லாம் பெரியவர்கள் கூறுவதைப் பார்த்திருப்போம். அதற்கான உண்மையான விளக்கம் தான் என்ன? பெரியவர்கள் எதிரில் கால் மேல் கால் போட்டு அமர்வது அவ்வளவு மரியாதையான செயல் இல்லை என்ற நோக்கில் அவ்வாறு கூறினாலும் அதன் பின்னணியில் நாம் யாரும் அறியாத ஆரோக்கியம் சார்ந்த அறிவியல் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக நாம் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் ஏதாவது வேலை செய்யும் போது கால்மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதைப் பார்த்திருப்போம். இவ்வாறு கால்மேல் கால் போட்டு அமர்வதனால்; உடலில் ரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது என்று ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நாம் கால் மேல் கால் போட்டு அமரும் போது, சிஸ்டாலிக் எனப்படும் ரத்த அழுத்தம் 7 சதவிகிதத்தினாலும், டயஸ்டாலிக் எனப்படும் ரத்த அழுத்தம் 2 சதவிகிதத்தினாலும்; அதிகரிக்கின்றதாம்.

எனினும், இது மட்டுமே அவ்வாறு கூறப்படுவதற்கான ஒரேயொரு தனிப்பட்ட காரணம் அல்ல மாறாக, நாம் அடிக்கடி காலை குறுக்கே போட்டு அமரும் போது, எமது இடுப்பு எலும்புகளின் இணைப்பில் அழுத்தம் ஏற்பட்டு நரம்புகளை சுருக்குகின்றதன் மூலம், ரத்த ஓட்டம் தடைப்பட்டு கால்களின் கீழ்ப்பகுதி நரம்புகளை வீக்கம் அடையச் செய்து, நாளடைவில் வெரிகோஸ் வெயின் எனப்படுகிற நரம்புப் பிரச்சினைiயும் உருவாக்குகின்றது.

இதயநோய் நிபுணரான டாக்டர் ஸ்டீபன் சினட்ரா என்பவர் பொதுவாக 10 முதல் 15 நிமிடங்களுக்கு மேல் எமது கால்களை குறுக்கே போட்டு அமரக் கூடாது என்று கூறுகின்றார். விசேடமாக… நீரிழிவுக்காரர்கள் கால் மேல் கால் போட்டு அமர்வதை அறவே முற்றமுழுதாக தவிர்த்தல் வேண்டும்.

பொதுவாக பெண்கள் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது என நம் முன்னோர்கள் சொல்லும் போது, இது ஒரு வகையான பெண் அடிமைத்தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் என்ற வகையில் நாமும் சொல்வதுண்டு. ஆனால் ஒன்று மட்டும் உண்மை, அவ்வாறு கூறிய நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை.

இங்கு கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம், திமிர் மற்றும் ஒழுங்கீனம் என மேலோட்டமாக சொல்லிவைத்தாலும், உண்மையில் அதன் உட்பொருளாக பெண்கள் கால்மேல் கால் போட்டு அமர்வதால், கால் மற்றும் அடிவயிறு பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைப்பட்டு சீராக அமையாது போதலே காரணமாக உள்ளது.

இதனை நாம் முக்கியத்துவம் கொடுக்காமல் கவனிக்காது விடும்போது, நாளிடைவில் கால் பகுதியில் ரத்த அழுத்தத்தினை உருவாக்கி, கர்ப்பைபை கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும், ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை உடுத்துவதனாலும் இத்தகைய பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

எனவே, நீண்ட நேரம் கால் மீது கால் போட்டு ஸ்ரைலாக அமரும்; பெண்களே உங்கள் கவனத்திற்கு. இனிமேலாவது கொஞ்சம் கவனமாக இருங்கள்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉலகில் 8 வது அதிசயம் விரைவில் அறிவிப்பதற்கு ஏற்பாடு. அது என்ன தெரியுமா?
Next articleசுவிஸ் குமார் உட்பட 7 பேருக்கு மரணதண்டனை!! இன்று வித்தியாவிற்கு நீதி கிடைத்தது!!