கால் நகத்தில் சொத்தையா? நகம் உடைந்து வலி மற்றும் துர்நாற்றம் வீசுதல் பூஞ்சைத் தொற்று போன்றவற்றை விரைவில் குணப்படுத்த சிறந்த இயற்கை வழிகள்!
கால் நகத்தில் சொத்தை ஏற்படுவது என்பது தற்போது சாதாரண விடயமாக மாறிவிட்டது. அதற்கான் காரணங்களாக, அதிக நேரம் ஷு அணிந்திருப்பது, ஷு அணிவது மட்டுமன்றி, வெறும் காலில் நடப்பது மற்றும் நோய் தொற்று ஏற்பட்டவர்களில் செருப்பை அணிவது போன்றவையும் தான் நக சொத்தை ஏற்படுவதற்கான காரணங்களாக உள்ளன. இவ்வாறு நகச் சொத்தை ஏற்பட்டால் அதில் எழக் கூடிய வலியினை விட நகம் உடைதல், துர்நாற்றம் வீசுதல், மற்ற நகங்களுக்கு பரவுதல் போன்ற ஏனைய பிரச்சனைகளும் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உண்டு.
இதனை ஆரம்ப காலத்திலேயே அதாவது முளையிலேயே கவனித்து உரிய மருத்துவம் எடுத்துக் கொள்ளதல் மிகவும் அவசியமாகும். இங்கு மருத்துவம் என்பது மருத்துவரை அணுகி தீர்வு பெறுவதை அன்றி, நம் வீட்டிலேயே சமையல் அறையில் உள்ள பொருட்களை வைத்தே இவற்றினை நீக்குதலைக் குறிக்கும். அட ஆமாங்க. இங்கே நாங்கள் அத்தகைய வைத்தியத்திற்கு உதவி செய்யக் கூடிய பொருட்களைப் பற்றியும் அவற்றை பயன்படுத்தும் முறைகள் பற்றியும் விரிவாகக் கூறியுள்ளோம். வாருங்கள் இனி நாம் அவற்றைப் பற்றி விரிவாக பார்ப்போம்…
முதலில், சிறிது நீரில் ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்து, அந்தக் கலவையில் அரை மணி நேரம் உங்கள் கால்களை நன்கு ஊற வைய்யுங்கள். இவ்வாறு செய்வதால் ஆப்பிள் சிடர் வினிகரில் உள்ள லேசான அமிலத் தன்மை காரணமாக நோய் தொற்று மற்ற விரல்களுக்குப் பரவாமல் தடுக்க முடியும். மேலும,; ஆப்பிள் சிடர் வினிகரில் நுண்ணுயிரிகளை அழிக்கக் கூடிய தன்மை உள்ளதனால், பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல செய்து, அதனை கால் சொத்தை ஏற்பட்ட இடத்தில் போட்டு 20 நிமிடம் ஊற விடுதல் வேண்டும்.
இவ்வாறு நாள் ஒன்றுக்கு ஒரு முறை செய்தல் போதுமானது. இங்கு, பேக்கிங் சோடாவிலுள்ள ஒரு காரத் தன்மையானது, சொத்தை மேற்கொண்டு அதிகரிக்காமலும், மற்ற விரல்களுக்கு பரவாமலும் தடுக்கின்றதுடன், டீ ட்ரீ ஆயிலில் உள்ள கிருமிநாசினி தன்மையானது கால் விரல்களில் உள்ள பாக்டீரியாக்களை அழித்துவிடுகின்றது.
நக சொத்தை ஏற்பட்டுள்ள இடத்தை ஆல்கஹால் கொண்டு சுத்தம் செய்து பின்னர் இந்த எண்ணெயை அந்த இடத்தில் தடவதல் மூலம் சிறப்பான பலனைப் பெற முடியும். இவ்வாறு, தினமும் ஒருமுறையாக தொடர்சியாக ஒரு மாத காலத்திற்கு செய்து வரும் போது நக சொத்தை இருந்த இடம் தெரியாமல் நீங்கி விடுகின்றது.
கற்பூரவல்லி எண்ணெயை பாதிப்படைந்த இடத்தில் 5 சொட்டு விட்டு தேய்த்து, 5 முதல் 10 நிமிடம் கழித்து கழுவி விடும் போது, இது ஒரு கிருமிநாசினியாக செயல்பட்டு பாதுகாக்கின்றது.
பூண்டு சிறிது பூண்டு பற்களை எடுத்து நன்கு நசுக்கி மிதமான சூடுள்ள தண்ணீரில் சேர்த்துக் கலந்து, இந்த தண்ணீரில் கால் சரியாகும் வரை காலை நன்கு ஊற வைக்க வேண்டும். மஞ்சள் தூள் பொதுவாக ஒரு கிருமிநாசினியாக பயன்படுத்தப்பட்டு வருகின்ற வகையில் பூஞ்சைத் தொற்று பண்புகள் மற்றும் கால் சொத்தையை எளிதில் சரி செய்துவிடும். ஒரு கரண்டி மஞ்சள் தூளுடன் சிறிதளவான தண்ணீர் சேர்த்துக் கலந்து காலில் தடவி 3 முதல் 4 மணி நேரம் வைத்திருந்து பின்னர் கழுவுதல் நல்ல பலனைத் தரும்.
பல்வேறு நோய் தொற்றுகளை போக்கும் பண்ப கொண்ட வேப்பிலையில் கை அளவு எடுத்து, அதனை நன்கு அரைத்து பேஸ்ட் போல செய்து சிறிது மஞ்சள் தூள் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்னர் கழுவினால் நக சொத்தை சரியாகி விடும்.
வெங்காயம் வெங்காயத்தில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் கால் நக சொத்தையை போக்கிவதில் சிறப்பான பங்காற்றுகின்றது. வெங்காயத்தை நறுக்கி நக சொத்தை உள்ள இடத்தில் 5 நிமிடம் தடவி, பின்னர், 20 நிமிடம் கழித்து அதை கழுவி விட வேண்டும்.
நடுத்தர சங்கிலி கொழுப்பு அமிலம் உள்ள தேங்காய் எண்ணெய் பூஞ்சைகளை அழித்து நோய் தொற்றுகளை அகற்றிவிடும். சிறிது தேங்காய் எண்ணெயை பாதிக்கப்பட்ட இடத்தில் தினமும் 2 முதல் 3 முறை தடவுதல் ஒரு எளிய கை வைத்திய முறையாக காணப்படுகின்றது.
By: Tamilpiththan