முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான், என்பதற்கு அர்த்தம் உங்களுக்கு தெரியுமா?
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்’! – என்று ஏன் சொல்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
பொதுவாக இந்த பழமொழிக்கு தவறான வகையில் அர்த்தம் புரிந்து கொண்டு பலர் எம் வீடுகளில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்து விடுகின்றோம். அதன் உண்மையான அர்த்தத்தை இன்றே தெரிந்துகொள்வோம்.
ஒருவர் முருங்கை மரத்தை தமது வீட்டில் வளர்த்தால் அவருக்கு அதிலிருந்து பூ, காய், இலை மற்றும் பிசின் என அனைத்தும் பயன் தரக்கூடியவை ஆகும்.
முருங்கை இலை எமது உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள உதவக் கூடிய ஒரு மூலிகை ஆகும். இவற்றை தினமும் யார் யாரெல்லாம் உணவில் சேர்த்துக் கொள்ளுகின்றார்களோ அவர்கள் அனைவரும் முதுமையடைந்தாலும் குச்சியின் துணையின்றி; வெறுங்கையோடு நடந்து செல்ல முடியும் என்பது உறுதி.
இதைத்தான் நம் முன்னோர்கள் “முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்” என்று சொல்லி வைத்தார்கள். ஆகவே நாமும் முருங்கையை நட்டு ஊன்று கோலின் துணையின்றி வெறுங்கையோடு நடப்போமா?
By: Tamilpiththan