யாழில் கஞ்சா கலந்த மாவா பாக்கினை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் பாடசாலை மாணவன் ஒருவர் இன்று காலை மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சங்குவேலிப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த மாணவனிடம் பொலிஸார் சோதனை செய்துள்ளனர். இதன் போதே கஞ்சா கலந்த மாவா பாக்கு வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவனே கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: