Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan உங்களுக்கு ஏற்படும் குடும்ப பிரச்சனைகள், கடன் தொல்லை, செய்வினை தோஷம், தீர்க்கும் எளிய பரிகாரங்கள்!

உங்களுக்கு ஏற்படும் குடும்ப பிரச்சனைகள், கடன் தொல்லை, செய்வினை தோஷம், தீர்க்கும் எளிய பரிகாரங்கள்!

0
4057

உங்களுக்கு ஏற்படும் குடும்ப பிரச்சனைகள், கடன் தொல்லை, செய்வினை தோஷம், தீர்க்கும் எளிய பரிகாரங்கள்!

எல்லோருக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் இருக்கும். அதற்கு ஒரு பரிகாரமும் இருக்கும்.

வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு, அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட, கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை [10.30-12.00 ]இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து, நெய்தீபம் ஏற்றி, தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதிகள் ஒற்றுமையாக, அன்னியோன்யமாக வாழ்வார்கள்.

குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால், அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது ரிஷிகள் சொல்லிய பரிகாரம்.

கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும், மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும்.

ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி, திருமண தடை விலகி நன்மை பெறலாம்.

ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.

வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால், ஏதும் பூதகணசேஷ்டைகள் இருந்தால் நின்று விடும்.

சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்குசாதகமாதல், பில்லி, சூனியம், ஏவல் நீங்கும். 21 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றிவழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.

கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றிசகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.

Previous articleஇந்த திசை நோக்கி விளக்கு ஏற்றுங்கள் ! அதிஸ்டம் மகிழ்ச்சி பெருகும் ! இந்த நன்மைகள் கிடைக்கும்!
Next articleநமக்கே தெரியாத அதிசயங்கள் நிறைந்த நமக்கு தெரிந்த 22 கோவில்கள்!