இந்த திசை நோக்கி விளக்கு ஏற்றுங்கள் ! அதிஸ்டம் மகிழ்ச்சி பெருகும் ! இந்த நன்மைகள் கிடைக்கும்!

0

ஒவ்வொரு நாளும் விளக்குகேற்றுவதால் வீட்டிற்கு லட்சுமி கடாட்ஷம் கிட்டும், செல்வ வளம் பெருகும். தீபம் ஏற்றுவதற்கு உகந்த நேரம் அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும்,பின்பு மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை தீபம் ஏற்றி வழிபடலாம்.

பொதுவான விதிமுறைகள்

தீபம் ஏற்றும் போது முதலில் நாம் எண்ணெய் அல்லது நெய் ஊற்றிய பின்னா் திரியினை வைக்க வேண்டும்.

விளக்கு ஏற்றும் போது கிழக்கு திசையினை நோக்கி ஏற்ற வேண்டும்.

நாம் விளக்கேற்றப்பயன்படுத்தும் விளக்கு, திரியினை பொறுத்து பலன்கள் கிட்டும்.

குறைந்தது இரண்டு திரிகளாவது ஏற்றவேண்டும்.

விளக்கில் எத்தனை திரி போடுகிறீா்களோ எல்லாவற்றையும் ஏற்ற வேண்டும்.

இரு திரியினை ஒன்றாக சேர்த்து முறுக்கி ஏற்றுவது நன்று.

வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி வணங்கிய பின்பு பூஜை செய்தல் நன்று.

தீபம் ஏற்றினால் எண்ணெய் முழுவதுமாக தீர்ந்து, தானாக அணையும் வரை விட்டு விடக் கூடாது.

தீபத்தை பூவினால் அல்லது கல்கண்டை கொண்டு அணைக்கவும். வாயினால் ஊதக்கூடாது.

இவ்வாறு நாம் தீபமேற்றி வழிபடுவதன் மூலம் இறைவனின் அருளையும் நிலையான அமைதியினை பெறலாம்.

திசைகள்

கிழக்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் வீட்டில் உள்ள பிணிகள் அகலும்

மேற்கு திசையில் தீபம் ஏற்றினால் கடன் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.

வடக்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்பத்தில் சந்தோஷமும் செல்வமும், பெருகும்.

தெற்கு திசையில் விளக்கேற்றக்கூடாது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசிவபெருமானுக்கு உகந்த நாட்களில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் நல்ல பலன் கிடைக்கும்!
Next articleஉங்களுக்கு ஏற்படும் குடும்ப பிரச்சனைகள், கடன் தொல்லை, செய்வினை தோஷம், தீர்க்கும் எளிய பரிகாரங்கள்!