Home Patti Vaithiyam மூலநோய் மற்றும் தோல்நோய் குணமாக்கும் குப்பைமேனி!

மூலநோய் மற்றும் தோல்நோய் குணமாக்கும் குப்பைமேனி!

0
3048

சாதாரணமாக நாம் வசிக்கும் பகுதிகளில் தெருவோரங்களில் வளரும் செடி குப்பைமேனி. குப்பைமேடுகளின் ஓரங்களில் வளருவதால் இதற்கு குப்பைமேனி என்ற பெயர் வந்துள்ளது. முழுத்தாவரமும் மருத்துவப் பயன் உடையது.
இதற்கு வேறு பெயர்களும் உண்டு அரிமஞ்சிரி, அண்டகம், அக்கினிச் சிவன், பூனை வணங்கி, அனந்தம், கொழிப் பூண்டு, சங்கரபுஷ்பி, மேனி.

குப்பைமேனியில் செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன.  இத்தாவரத்தில் அல்கலாய்டுகள், குளுக்கோசைடுகள், அஸிடேட்கள், எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. அகாலிஃபமைடு, காலிபோல் அஸிடேட், அகாலிஃபைன், டிரைஅஸிட்டோனமைன், கெம்ஃபெரால் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன.

இலையை உலர்த்தி சூரணம் போல் தயாரித்து 10 குன்றிமணி எடை வீதம் தேனில் கலந்து கொடுத்து வந்தால் இருமல், இரைப்பு, கபம் முதலியவை குணமடையும்.

குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் உடல் அரிப்பு மற்றும் சிரங்கு நீங்கி சருமம் பொலிவுபெறும்.

இந்த இலையின் பொடியை மூக்கில்பொடிபோல் இழுக்க நீர் வடிந்து தலைவலி உடனேகுணமடையும். இதனை நசியமிடுதல் என்பர். வெறிநாய்க் கடியும், சித்த பிரமையும் குணமடையும்.

குப்பைமேனி வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது. இலையை அரைத்து சாறு எடுத்து குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி கொடுத்தால் பேதியாகும். வயிற்றில் உள்ள கிருமிகள் வெளியேறும். இது மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. வேரானது வயிற்றுப்போக்குக்கு மருந்தாகிறது.

குப்பைமேனி, முருங்கைக்கீரை இரண்டையும் நல்லெண்ணையில் வதக்கி வேறு எதுவும் சேர்க்காமல் காலை மாலை இரண்டு வேளை சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

படுக்கைப் புண் மற்றும் நாள்பட்ட புண்களை ஆற்றுகிறது. இலையை விளக் கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கட்டி வரப் படுக்கைப் புண்கள் தீரும்.

பெண்கள் சிலருக்கு மேல் உதட்டில் ரோமம் வளா்ந்து இருக்கும்  குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை மாவு போல் அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மீசை இருக்கும் பகுதியில் இரு வாரங்கள் பூசி வந்தால், முடி உதிர்ந்து முகம் பளிச்சிடும்.

இலையினை ஆமணக்கு எண்ணெயில் வதக்கி இளஞ‌்சூட்டுடன் முடக்கு வாத நோய், மூட்டுவலிக்கு தடவினால் விரைவில் குணமடையும்.

மூலநோய்க்கு குப்பைமேனிசிறந்த மருந்தாகும். பூத்த குப்பைமேனியை வேருடன்பிடுங்கி நிழலில் உணர்த்தி சூரணம் செய்து இதில்2 – 5 கிராம் அளவு பசும் நெய்யில் 48 நாள் காலை, மாலை சாப்பிட எந்தவகை மூலநோய்யும் முற்றிலும் குணமாகும்.

9 குப்பை மேனி இலையுடன் 6 மிளகை அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு பின் பசும்பாலைக் குடிக்கவும். இதனை மூன்று நாட்கள் செய்து உப்பில்லா பத்தியம் இருக்க யானைக்கால் சுரம் குணமாகும்.

By: Tamilpiththan

Previous articleகண்நோய், நரம்புத் தளர்ச்சி, பித்தம் குறைக்கும் செண்பக பூக்கள்!
Next articleநினைவாற்றல் அதிகரிக்க, மனநோய் குணமாக, உடல் சோர்வு நீங்க, வல்லாரை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்!