2023 புத்தாண்டில் எந்த எந்த‌ ராசிக்காரர்லளுக்கெல்லாம் அதிச்டம் தேடி ஓடி வரும்… வாங்க பக்கலாம்

0

2023 புத்தாண்டில் எந்த எந்த‌ ராசிக்காரர்லளுக்கெல்லாம் அதிச்டம் தேடி ஓடி வரும்… வாங்க பக்கலாம்

மேஷ ராசிக்காரர்களுக்கு
புத்தாண்டில் மேஷ ராசிக்காரர்களுக்கு நவ கிரகங்களின் சஞ்சாரமும் சாதகமாக உள்ளது. காதல் வாழ்க்கையில் கவிதை பாடுவீர்கள். புதுமண தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். சுபகாரியங்கள் நடைபெறும் ஆசைகள் நிறைவேறும்.

இடமாற்றம் உண்டு. அந்த இட மாற்றத்தினால் வெற்றி கிடைக்கும்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு
புத்தாண்டில் உங்கள் ராசிக்கு இவ் ஆண்டில் குருவும், சனிபகவானும் நிறைய சாதகங்களை செய்யப்போகிறார்கள். குடும்ப விசயத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். காதல் வானில் சிறகடித்துப்பறக்கப்போகிறீர்கள். காதல் வெற்றிகரமாக கல்யாணத்தில் முடியும். திருமணம் முடிந்தவர்களுக்கு நெருக்கமும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

மிதுன ராசிக்காரர்களுக்கு
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகவே உங்கள் வாழ்க்கையில் கிரகங்கள் புகுந்து விளையாடியுள்ளன. கண்டச்சனி, அஷ்டமத்து சனி என அடிமேல் அடி பட்டிருப்பீர்கள். புத்தாண்டில் இனி விடிவுகாலம் பிறக்கப்போகிறது.

நீங்கள் கடன் பட்டு கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இனி நிம்மதி பெருமூச்சு விடக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. ஒன்பதாம் வீட்டிற்கு சனிபகவான் வரப்போகிறார். வலி வேதனைகள் நீங்கப்போகிறது. முன்ஜென்மத்தில் செய்த புண்ணியங்களுக்கு பலன் கிடைக்கும்.

கடக ராசிக்காரர்களுக்கு
கடக ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு அற்புதங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. காரணம் மே மாதம் வரை குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது.

இவர்களுக்கு குரு பார்த்தால் கோடி நன்மை என்பதால் வேறு எந்த வித தோஷங்களும் பாதிக்க வாய்ப்பு இல்லை. அஷ்டமத்து சனி என்றாலும் கஷ்டங்களை தர மாட்டார் மாறாக எட்டாம் வீட்டு அதிபதி எட்டாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் உங்களுக்கு விபரீத ராஜ யோகத்தை தரப்போகிறார் சனிபகவான். பணம் தேடி ஓடி வரும்.

Key: 2023 rasi palan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleApril 01 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil April 01
Next articleதீபாவளிக்குப் பின் எந்த ராசிக்காரர்களுடைய‌ வாழ்க்கையில் பொன்மழை பொழியும் தெரியுமா!