இன்று 05-07-2022 ஆனி மாதம் 21ம் நாள் செவ்வாய்க்கிழமை ஆகும். இன்று சஷ்டி திதி இரவு 07.29 வரை பின்பு வளர்பிறை சப்தமி. இன்று பூரம் நட்சத்திரம் பகல் 10.30 வரை பின்பு உத்திரம். இன்று சித்தயோகம் பகல் 10.30 வரை பின்பு அமிர்தயோகம். இன்று நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். இன்று முருக வழிபாடு நல்லது.
இராகு காலம்: மதியம் 03.00-04.30, எம கண்டம்: காலை 09.00-10.30, குளிகன்: மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள்: காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மேஷம் ராசிக்காரர்களே:
இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மன ஸ்தாபம் நீங்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை கூடும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ரிஷபம் ராசிக்காரர்களே:
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும்.
மிதுனம் ராசிக்காரர்களே:
இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட திறமையுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும்.
கடகம் ராசிக்காரர்களே:
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். மன அமைதி குறைவதற்கான சூழ்நிலை உருவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று தாமதநிலை ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் நற்செய்தி கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள்.
சிம்மம் ராசிக்காரர்களே:
இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியில் முடியும். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளால் அனுகூலம் கிட்டும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
கன்னி ராசிக்காரர்களே:
இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் உதவியால் பணப்பிரச்சினை குறைந்து மனநிம்மதி உண்டாகும்.
துலாம் ராசிக்காரர்களே:
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம் ராசிக்காரர்களே:
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் செய்யகூடிய சூழ்நிலை உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளின் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் ரீதியாக லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும்.
தனுசு ராசிக்காரர்களே:
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். மற்றவர்களை நம்பி கொடுத்த பொறுப்புகளில் ஏமாற்றங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறும் நிலை உருவாகும்.
மகரம் ராசிக்காரர்களே:
இன்று உங்களுக்கு குடும்பத்தினருடன் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு மாலை 04.50 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் காரியங்களில் இடையூறுகள் ஏற்படலாம். மாலையில் ஓரளவு சாதகமான பலன் உண்டாகும்.
கும்பம் ராசிக்காரர்களே:
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உங்கள் ராசிக்கு மாலை 04.50 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மன அமைதி குறையும். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
மீனம் ராசிக்காரர்களே:
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். இதுவரை வராத கடன்கள் இன்று வசூலாகி மகிழ்ச்சி அளிக்கும்.