இன்றைய ராசி பலன் 30.06.2022 Today Rasi Palan 30-06-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

இன்று 30-06-2022 ஆனி மாதம் 16ம் நாள் வியாழக்கிழமை ஆகும். இன்று பிரதமை திதி பகல் 10.49 வரை பின்பு வளர்பிறை துதியை. இன்று புனர்பூசம் நட்சத்திரம் பின்இரவு 01.07 வரை பின்பு பூசம். இன்று அமிர்தயோகம் பின்இரவு 01.07 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம்.

இராகு காலம்: மதியம் 01.30-03.00, எம கண்டம்: காலை 06.00-07.30, குளிகன்: காலை 09.00-10.30, சுப ஹோரைகள்: காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேஷம் ராசிக்காரர்களே:

இன்று வீட்டில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்களுக்கு வெளியூரில் இருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகி வருமானம் பெருகும்.

ரிஷபம் ராசிக்காரர்களே:

இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் விரயங்கள் உண்டாகும். வீட்டில் பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.

மிதுனம் ராசிக்காரர்களே:

இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவார்கள். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய கடன்கள் வசூலாகும்.

கடகம் ராசிக்காரர்களே:

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். பணவரவு சுமாராக இருக்கும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் சந்திப்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

சிம்மம் ராசிக்காரர்களே:

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி உண்டாகும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும். தெய்வீக ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

கன்னி ராசிக்காரர்களே:

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை அமோகமாக இருக்கும். பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழிலில் பணியாட்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபங்களை அடைவீர்கள். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

துலாம் ராசிக்காரர்களே:

இன்று உங்களுக்கு வண்டி, வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். எதிலும் நிதானம் தேவை.

விருச்சிகம் ராசிக்காரர்களே:

இன்று நீங்கள் மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. பேச்சில் கவனமாகவும், மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் உத்தமம்.

தனுசு ராசிக்காரர்களே:

இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சிறு தடங்கல்கள் ஏற்படலாம். வேலை விஷயமாக செல்லும் பயணங்களில் கவனம் தேவை. குடும்பத்தில் ஒற்றுமை நிலவ அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள்.

மகரம் ராசிக்காரர்களே:

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் விலகி லாபம் பெருகும்.

கும்பம் ராசிக்காரர்களே:

இன்று பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். புதிய நுட்பங்களை பயன்படுத்தி தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். பழைய கடன்கள் வசூலாகும்.

மீனம் ராசிக்காரர்களே:

இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத திடீர் விரயங்கள் ஏற்பட்டு அதன் மூலம் மன நிம்மதி குறையும். எந்த விஷயத்திலும் அவசரம் காட்டாமல் பொறுமையுடன் செயல்படுவதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுருவின் வக்கிர பெயர்ச்சி! மகாலட்சுமி யோகத்தால் பேரதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள்
Next articleஇன்றைய ராசி பலன் 01.07.2022 Today Rasi Palan 01-07-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!