இன்றைய ராசி பலன் 24.06.2022 Today Rasi Palan 24-06-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

இன்று 24-06-2022 ஆனி மாதம் 10ம் நாள் வெள்ளிக்கிழமை ஆகும். இன்று ஏகாதசி திதி இரவு 11.12 வரை பின்பு தேய்பிறை துவாதசி. இன்று அஸ்வினி நட்சத்திரம் காலை 08.03 வரை பின்பு பரணி. இன்று அமிர்தயோகம் காலை 08.03 வரை பின்பு சித்தயோகம். இன்று நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது ஆகும். இன்று சுபமுகூர்த்த நாள். இன்று சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்: பகல் 10.30-12.00, எம கண்டம்: மதியம் 03.00-04.30, குளிகன்: காலை 07.30 -09.00, சுப ஹோரைகள்: காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேஷம் ராசியினருக்கு:

இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

ரிஷபம் ராசியினருக்கு:

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

மிதுனம் ராசியினருக்கு:

இன்று குடும்பத்தில் தாராள தனவரவு உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். பிள்ளைகளால் பெருமை சேரும். தொழில் ரீதியாக வங்கி கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.

கடகம் ராசியினருக்கு:

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்.

சிம்மம் ராசியினருக்கு:

இன்று குடும்பத்தில் சாதகமற்ற சூழ்நிலை நிலவும். எடுக்கும் முயற்சிகளில் உடனிருப்பவர்களால் இடையூறுகள் உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் மேலதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் ஓரளவு திருப்திகரமாக இருக்கும்.

கன்னி ராசியினருக்கு:

இன்று உங்களுக்கு மன உளைச்சல், தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் காரியங்களில் தாமதங்கள் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

துலாம் ராசியினருக்கு:

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன் கிடைக்கும்.

விருச்சிகம் ராசியினருக்கு:

இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை படிப்படியாக நீங்கி புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் உண்டாகும்.

தனுசு ராசியினருக்கு:

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே மனஸ்தாபங்கள் ஏற்படும். உத்தியோக ரீதியாக செல்லும் பயணங்களில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களால் அனுகூலமான பலன்கள் கிட்டும். புதிய பொருள் வீடு வந்து சேரும்.

மகரம் ராசியினருக்கு:

இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம் ராசியினருக்கு:

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும்.

மீனம் ராசியினருக்கு:

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு கூடும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும். பணபற்றாக்குறை ஓரளவு குறையும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 23.06.2022 Today Rasi Palan 23-06-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 25.06.2022 Today Rasi Palan 25-06-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!