மிதுன மாதத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு இனி வாழ்வில் உண்டாகும் மிகப்பெரிய அதிர்ஷ்டம்!
ஆனி மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம்,மீன ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
துலாம்
ஆனி மாதத்தில் குடும்பத் தேவைக்காக வங்கிச் சேமிப்பை உயர்த்துவீர்கள். தொழிலில் நேர்மையைக் கடைப்பிடிப்பீர்கள். கமிஷன் தொழில் கணிசமான லாபத்தைக் கொடுக்கும். ஆன்லைன் வர்த்தகங்களில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டாம். வாகனங்களில் போகும் போது மிகுந்த எச்சரிக்கையாக இருங்கள்.
விருச்சிகம்
புதிய வீடு கட்டுவதற்காக நீங்கள் போட்ட திட்டம் நிறைவேறும். பங்குச்சந்தை வியாபாரம் சற்று மந்தமாகவே நடக்கும். ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக அனுகூலம் பார்க்க முடியாது. சில்லரை வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவார்கள். புதிய வாகனம் வாங்க முயற்சி செய்வீர்கள். வேலைப்பளுவால் அலைச்சல் அதிகமாகும்.
தனுசு
ஆனி மாதத்தில் அற்புதமான பலன்களைப் பார்க்கப் போகிறீர்கள். தொழிலில் கிடைக்கும் உபரி வருமானத்தை நிலத்தில் முதலீடு செய்வீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் மட்டும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். எவ்வளவுதான் அனுசரித்துப் போனாலும் கணவன்-மனைவிக்கிடையே கசப்புணர்வு இருக்கத்தான் செய்யும்.
மகரம்
ஆனி மாதம் ஏணியாக நின்று பல ஏற்றங்களைத் தரப்போகிறது. வருமானத்தை அதிகரித்து வசதியை பெருக்கிக் கொள்ளும் முயற்சிகளில் இறங்குவீர்கள். முன்பு வாங்கிய சொத்தில் இருந்த வில்லங்கம் விலகிப் போகும். திருமணத்திற்காக வரன் தேடி வந்தவர்களுக்கு யோகம் உண்டாகும்.
கும்பம்
ஆனி மாதத்தில் வசீகரப் பேச்சால் வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். ஆசிரியர்கள், வழக்கறிஞர், ஆய்வாளர்கள் வேலைத் திறனால் மதிப்பை உயர்த்திக் கொள்வார்கள். புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற காலம் இது.
உங்களிடம் கடன் வாங்கியவர் வீடு மாறி சென்று இம்சையை ஏற்படுத்துவார். புதிய ஆர்டர்கள் பிடிப்பதில் வெற்றி காண்பீர்கள்.
மீனம்
ஆனி மாதத்தில் அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கான பலன்களைக் கண்டிப்பாக அடைவீர்கள். இழந்ததை அடையக் கூடிய அளவுக்கு ஏற்றமாக வருமானம் கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் இருந்த வில்லங்கம் விலகி மனநிம்மதி உண்டாகும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். கவனக்குறைவால் சில நேரங்களில் விபத்து ஏற்படலாம். பட்டப்படிப்பு குறித்த மாணவர்களின் ஏக்கமும் எதிர்பார்ப்பும் நிறைவேறும்.