துலாம்
24ஆம் தேதிக்கு மேல் சுப செய்திகள் தேடி வரும். குருவின் சஞ்சாரம் மற்றும் பார்வையால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். 17ஆம் தேதிக்குப் பின்னர் ஆன்மீகப் பயணம் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் சஞ்சலம் உண்டாகும்.
ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் யாரிடமும் விதண்டா வாதம் செய்யாதீர்கள். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும்.
விருச்சிகம்
24ஆம் தேதிக்கு மேல் புதிதாக வண்டி வாகனம் வாங்குவீர்கள். 17ஆம் தேதிக்குப் பின்னர் வண்டி வாகன யோகம் உண்டாகும்.
சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை பராமரிப்பு செய்வது அவசியம். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் அக்கம்பக்கத்தினரால் நன்மை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் அசதியும் சோம்பலும் அதிகரிக்கும்.
தனுசு
24ஆம் தேதிக்கு மேல் இளைய சகோதரர்களால் நன்மை உண்டாகும், அடிக்கடி வெளியூர் செல்வீர்கள். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும், தாய் மாமனின் உதவி கிடைக்கும்.
குரு பகவான் மூன்றாம் வீட்டில் பயணம் செய்வதால் புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும், மாத பிற்பகுதியில் வீடு நிலம் வாங்கலாம்.
சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும்.கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி முதலீடுகள் அதிகரிக்கும்.
மகரம்
24ஆம் தேதிக்கு மேல் இரண்டாமிடத்திற்கு செல்வதால் வீண் பேச்சினை தவிர்க்கவும். பேச்சில் கவனம் தேவை. சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் அழகு அதிகரிக்கும் 17ஆம் தேதிக்குப் பின்னர் பெண்கள் பொன் நகைகளை வாங்குவீர்கள்.
உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும், உடலில் அசதி உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
கும்பம்
24ஆம் தேதிக்குப் பின்னர் பேச்சில் கோபத்தை குறைத்துக்கொள்ளவும். வீண் வாக்குவாதம் தவிர்க்கவும்.
புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும், பேச்சில் நகைச்சுவை உணர்வு அதிகரிக்கும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும் 17ஆம் தேதிக்குப் பின்னர் முக வசீகரம் அதிகரிக்கும்.
கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் நினைத்த காரியங்கள் வெற்றியடையும். புதிய பதவி உயர்வு கிடைக்கும்.
மீனம்
செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.வங்கி சேமிப்பு உயரும்.
சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் 17ஆம் தேதிக்குப் பின்னர் செலவுகள் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதின் ஆசைகள் எல்லாம் நிறைவேறும், சுய தொழிலில் ஏற்றம் ஏற்படும்.