சூரியன் 2022 பிப்ரவரி 13 ஆம் தேதி சனி பகவானின் ராசியான கும்ப ராசிக்குள் நுழைந்தார்.
இந்த ராசியில் ஏற்கனவே குரு பகவான் பயணித்து வருகிறார். குருவும், சூரியனும் நட்பு கிரகங்கள்.
தற்போது கும்பத்தில் இந்த இரண்டு கிரகங்களும் இணைந்திருப்பதால் யார் யாருக்கு நன்மை கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்
குரு-சூரிய சேர்க்கை காலத்தில் லாபம் அடைய வாய்ப்புள்ளது. உங்கள் புகழ் எங்கும் உயரும். இக்காலத்தில் பணத்தை அதிகம் சேமிப்பீர்கள்.
கடகம்
உங்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க வாய்ப்புக்கள் உள்ளன. வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
கன்னி
கன்னிக்கு குரு-சூரிய சேர்க்கை நல்ல பலன் கிடைக்கும். இக்காலத்தில் அதிர்ஷ்டம் பெரிதும் ஆதரிக்கும். பணமும் ,புகழும் குவியும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும். லாபம் கிடைக்கும். வருமான உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இக்காலத்தில் தொழிலில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஒவ்வொரு வேலையிலும் முழு ஆதரவு கிடைக்கும். முக்கியமாக உங்கள் செல்வமும் சொத்தும் இக்காலத்தில் பெருகும்.