முப்பது வருடங்களுக்கு பின் கும்ப ராசிக்கு செல்லும் சனியால் அதிஸ்டம் பெறும் நான்கு ராசிக்காரர்கள்! விபரீத ராஜயோகங்கள் காத்திருக்கின்றது.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களின் நிதி நிலை திரென்று உயரும். வணிகத்துடன் தொடர்புடையவர்களுக்கு சிறப்பாக இருக்கும். புதிய தொழில் தொடங்க நினைத்தால், அதற்கு இந்த காலம் சாதகமாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. உங்கள் ராசியின் அதிபதி சுக்கிரன் என்பதால், இந்த சனி பெயர்ச்சியால் உங்களுக்கு அனைத்துவிதமான ஆடம்பரங்களும், சுகபோகங்களும் நிறைந்திருக்கும்.மேலும் உங்கள் பணத்தை அதிகமாக சேமித்து வைப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு பொன்னான காலமாக இருக்கும். எப்போதும் கையில் பணம் இருந்து கொண்டே இருக்கும். நிலம், வீடு போன்றவற்றை வாங்குவதற்கு இது சிறந்த காலமாக இருக்கும். தொழிலதிபர்கள் தங்களின் வியாபாரத்தை பெருக்குவதற்கு சாதகமான காலமாக இருக்கும். சட்ட விஷயம் தொடர்பான முடிவுகள் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இந்த ஆண்டு சனியின் பிடியில் இருந்து விடுபடுகிறார்கள் என்பதால் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். மேலும் சனி பகவானின் சிறப்பான அருள் இந்த ராசிக்காரர்கள் மீது இருக்கும். பணியிடத்தில் நல்ல பதவி உயர்வு மற்றும் பண உயர்வுக்கான வலுவான வாய்ப்புள்ளது.