திசை திரும்பும் குருவின் பார்வையும்! கிரகங்களின் இடமாற்றத்தால் கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு ஏற்படப்போகும் மாற்றம்! குரு பகவான் இந்த மாதம் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியடைகிறார்.
நவம்பர் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ரிஷப ராசியில் ராகு, விருச்சிக ராசியில் கேது, மகர ராசியில் சனி, தனுசு ராசியில் சுக்கிரன், துலாம் ராசியில் மாத முற்பகுதியில் பயணிக்கும் சூரியனுடன் புதன், செவ்வாய் இணைந்து பயணம் செய்கின்றனர்.
மாதத்தின் பிற்பகுதியில் சூரியன், புதன் விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி கேது உடன் இணைகிறார். குரு பகவான் மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார்.
இந்த கிரகங்களின் இடமாற்றத்தால் கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு பலன்கள் பரிகாரர்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
கடகம் ராசிக்காரர்களுக்கு: இரண்டாம் வீட்டு அதிபதி சூரியனுடன் பத்தாம் வீட்டு அதிபதி செவ்வாய் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் புதனுடன் இணைந்துள்ளார்.
உங்களின் ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கிறார். ஆறாம் வீட்டில் சுக்கிரன், ஏழாம் வீட்டில் சனி, குரு என கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.
உங்களுக்கு வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும், புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில் ஸ்தான அதிபதியின் பார்வை பத்தாம் வீட்டில் விழுவதால் புரமோசனும் நல்ல சம்பளமும் கிடைக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். இருக்கிற வேலையில் கவனம் தேவை.
உங்கள் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குருவின் பார்வை இப்போது உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். மாத பிற்பகுதியில் குரு இடப்பெயர்ச்சியாகி எட்டாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானம்,குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானங்களின் மீது விழுகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
வீட்டில் திருமண சுப காரியங்களுக்காக செய்யும் முயற்சிகளில் தடைகள் உருவாகும். காதல் வாழ்க்கையில் சில பிரச்சினைகள் வரலாம் அதிக பேச்சு வேண்டாம் வீட்டுக்கொடுத்து செல்லவும். மாணவர்கள் முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பாக கவனமும் நிதானமும் தேவை. அமைதியும் தியானமும் மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
ஆரோக்கிய மற்றும் உணவு விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இரவு நேரங்களில் காரமான உணவுகளை சாப்பிட்டால் வயிறு பிரச்சினைகள் வரலாம் எனவே கவனம் தேவை.
சிம்மம் ராசிக்காரர்களுக்கு: சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் மூன்றாம் வீட்டில் சூரியன், செவ்வாய், புதன், நான்காம் வீட்டில் கேது, ஐந்தாம் வீட்டில் சுக்கிரன், ஆறாம் வீட்டில் சனி குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. வேலையில் மாற்றம் முன்னேற்றம் ஏற்படும்.
நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வீடு தேடி வரும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
உங்களுக்கு சுப கிரகங்கள் சாதகமாக உள்ளன. குடும்பம் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்ததாக இருக்கும். குடும்பத்தோடு இணைந்து சுற்றுலா செல்வீர்கள். ஐந்தில் சுக்கிரன் பயணம் செய்கிறார்.
மாத பிற்பகுதியில் ஏழாம் வீட்டிற்கு குரு இடப்பெயர்ச்சியாகி ராசிக்கு பார்வை கிடைப்பதால் காதல் கை கூடி வரும். மனதிற்கு பிடித்த வரன் அமையும். திருமணம் சுப காரியம் கை கூடி வரும்.
உங்கள் குடும்பத்தில் பரஸ்பர ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கை கூடி வரும். இந்த மாதத்தில் சொந்த வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் கை கூடி வரும்.
இல்லத்தரசிகளுக்கு இது ரொம்ப நல்ல மாதம் ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கை கூடி வரும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.
மாதத்தின் பிற்பகுதியில் சூரியன் கேது உடன் இணைவதால் தியானம் மன அமைதி தேவை. ஆலய தரிசனம் மன அமைதியைக் கொடுக்கும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு: புதனை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் நான்காம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். குடும்ப செலவுகள் அதிகரிக்கும்.
சுக்கிர பகவானின் பார்வை உங்களுக்கு சந்தோஷத்தையும் நல்ல வேலையையும் தேடி கொடுக்கும். குரு ஆறாம் வீட்டில் பயணம் செய்யப்போவதால் ஏதோ மனக்குறை இருந்து கொண்டே இருக்கும். ராசி நாதன் புதன் பத்தாம் வீட்டு அதிபதியும் அவரே. வார்த்தையில் நிதானமும் தேவை. பொறுமையும் நிதானமும் அவசியம்.
குடும்பத்தினருடன் அதிகம் பேச வேண்டாம் காரணம் குடும்ப ஸ்தானத்தில் உஷ்ண கிரகங்கள் செவ்வாய் சூரியன் இணைந்துள்ளதால் கோபம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களுடன் பேசும் போதும் நிதானம் அவசியம்.
வேலைத்தலத்தில் அமைதியாக இருப்பதே நல்லது. வேலையில் பிரச்சினைகள் வந்தாலும் சமாளித்து விடுவீர்கள். குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் திருமணம் வரன் பேசுவதில் சில தடைகள் ஏற்படும். முயற்சி செய்வதை தள்ளிப்போடுவது நல்லது.
உங்களின் காதல் வாழ்க்கையில் சில சிக்கல்கள் வரலாம் சண்டை வந்தாலும் சமாதானமாக செல்வது அவசியம். பெண்களுக்கு இல்லத்தரசிகள் இந்த மாதம் செலவுகள் அதிகரிக்கும். வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
உங்களுக்கு வேலைப்பளுவும் கூடும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். பெரிய அளவில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறையும் கவனமும் தேவைப்படும் மாதமாகும்.
உணவு விசயத்தில் கவனம் தேவை. காரணமான உணவுகளைத் தவிர்த்து விடவும். நவம்பர் மாதத்தில் பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் தேவையில்லை சிரமங்களை எளிதில் கடந்து விடலாம்.