கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3 பிரபலமானவர் தர்ஷன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதியில் தொகுப்பாளர் கமல ஹாசனின் இந்தியன் 2, படத்தில் தர்ஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் முறையான அறிவிப்புகள் வெளியாகாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமே.
தற்போது அவர் “தாய்க்கு பின் தாரம்” மியூசிக் ஆல்பம் ஒன்றில் நடித்துள்ளாராம். இதில் அவருக்கு ஜோடியாக சத்யா சீரியல் நடிகை ஆயிஷா நடித்துள்ளார்.
இதனை தர்ஷன் தன்னுடைய இன்ஸ்ரகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், லேட்டஸ்ட் ஆல்பம் பலரையும் கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம்.
By: Tamilpiththan