குருவால் யாருக்கு அதிஸ்டம் இன்னும் 120 நாட்களில் குருபகவான் என்ன செய்ய இருக்கிறார்? துலாம் முதல் மீனம் வரை!

0

தனுசு ராசியில் இருந்த குருவானவர் கடந்த மார்ச் மாதம் அதிசாரமாக மகரம் ராசிக்கு மாற்றம் பெற்றார். குரு பகவான் இப்போது வக்ரமடைந்து மீண்டும் பின்னோக்கி நகர்கிறார்.

வைகாசி மாதம் சூரியனுக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கும் குரு பகவான் ஆவணி மாதம் சிம்மம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது வக்ர நிவர்த்தி அடைகிறார். 14-05-2020 முதல் வக்கிரம் பெற்று 29-06-2020 ஆம் தேதி வக்கிர கதி பெற்று தனுசு ராசிக்கு குரு வந்துவிடுகிறார்.செப்டம்பர் 13ஆம் தேதி வரை குரு பகவான் வக்ரமாக தனுசு ராசியில் சஞ்சரிப்பார்.

அந்தவகையில் 120 நாட்கள் வக்ரநிலையில் சஞ்சரிக்கும் குருபகவான் யாருக்கு சாதகமான பலனையும் யாருக்கு பாதகமான பலனையும் தரப்போகிறார் என்று பார்ப்போம்.

துலாம்
உங்களுக்கு எந்த காரியத்திலும் நிதானமும் பொறுமையும் அவசியம். உறவினர்களால் செலவுகள் அதிகரிக்கும். அரசு வழி காரியங்களில் பிரச்சினை வரலாம் கவனத்துடன் செயல்படவும். குரு பகவான் பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரமாக செல்லும் கால கட்டமான ஜூலை 31 முதல் செப்டம்பர் 10 வரைக்கும் உங்களுக்கு அற்புதமான காலகட்டம் ஆகும். உங்கள் வருமானம் அதிகரிப்பதால் எண்ணங்கள் நிறைவேறும். உங்களின் ஆரோக்கியம் நல்லமுறையில் இருக்கும் இருக்கும்.

விருச்சிகம்
உங்களுக்கு வீண் பிரச்சினைகள் ஏற்படலாம் அதனால் வாக்குவாதத்தை தவிர்த்து விடுங்கள். இளைய சகோதரர்கள் மூலம் பிரச்சினைகள் ஏற்படலாம். பெற்றோருடன் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். உங்களுக்கு வேலைச்சுமை அதிகரித்தாலும் சுறுசுறுப்பாக உற்சாகத்துடன் வேலையை செய்து முடிப்பீர்கள். அதிகாரமுள்ள பதவிகள் கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும், மனைவி மூலம் ஆதரவு அதிகமாகும். மனைவி வழி சொத்துக்கள் கிடைக்கும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் அமையும்.

தனுசு
இதுவரை குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் நீங்கும். எதிர்பார்த்த வங்கிக்கடனுதவி கிடைக்கும். உங்களுக்கு இருந்த‌ எதிர்ப்புகள் நீங்கி எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறி மனதெல்லாம் மகிழ்ச்சி மத்தாப்பூ பூக்கும். உறவினர்களுட‌ன் கூடி மகிழ்வீர்கள். உங்கள் ராசிக்கு ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 10 வரைக்கும் உங்கள் ஜென்ம ராசியில் பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிரமாக செல்வதால் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சிறுசிறு சச்சரவுகள் ஏற்படும். புதிய பதவிகள் தேடி வரும் ஆனாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து வேலையை ஒத்துக்கொள்ளுங்கள்.

மகரம்
மகரம் ராசிக்காரர்ளுக்கு பணியிடத்திலோ அல்லது வீட்டிலோ வேலைச்சுமை அதிகமாகும். எண்ணெய் பலகாரங்கள் மற்றும் காரமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். புதிய நபர்களின் நட்புக்களில் கவனமாக‌ இருங்கள். கடன் பிரச்சினைகள் ஏற்படும். கர்ப்பிணி பெண்கள் இந்த கால கட்டத்தில் மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். அலைச்சல் செலவு அதிகமாகும்.

கும்பம்
கும்பம் ராசிக்காரர்களுக்கு இதுவரை முடங்கியிருந்த காரியங்கள் நன்மையாக நடைபெறும். வட்டிக்கு கடன் வாங்கியிருந்தவர்களுக்கு பண நெருக்கடிகள் வரலாம். எதையும் திட்டமிட்டு செய்தால் பிரச்சனைகளில் இருந்து விலகலாம். தேவையற்ற செலவுகளை தவிர்த்து விடுங்கள். வீடு வாகன பராமரிப்பு செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாழக்கிழமைகளில் குரு பகவானை வணங்குங்கள் பாதிப்புகள் நீங்கும்.

மீனம்
உங்களுக்கு இந்த கால கட்டத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும். உங்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. இதுவரை இருந்த‌ கடன்களை திருப்பி கொடுக்கும் சூழ்நிலை உண்டாகும். தொலைந்து போன பொருட்கள் ஆவணங்கள் திரும்ப கிடைக்கும். இதுவரை தடைபடிருந்த‌ காரியங்கள் நிறைவேறும். நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த நண்பர்களை சந்திப்பீர்கள். கஷ்டமான காரியங்களை சுலபமாக செய்து முடிப்பீர்கள். சுப காரியங்கள் கைகூடி வரும். எல்லா முயற்சிகளும் சிறப்பாக அமையும்.

மேசம் முதல் கன்னி வரை!

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 19.05.2020 Today Rasi Palan 19-05-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleபேஸ்(பு)க் பதிவால் பறி போன இளம் குடும்பஸ்தரின் உ(யிர்)!