குருவால் யாருக்கு அதிஸ்டம் இன்னும் 120 நாட்களில் குருபகவான் என்ன செய்ய இருக்கிறார்? மேசம் முதல் கன்னி வரை!

0

தனுசு ராசியில் இருந்த குருவானவர் கடந்த மார்ச் மாதம் அதிசாரமாக மகரம் ராசிக்கு மாற்றம் பெற்றார். குரு பகவான் இப்போது வக்ரமடைந்து மீண்டும் பின்னோக்கி நகர்கிறார்.

வைகாசி மாதம் சூரியனுக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கும் குரு பகவான் ஆவணி மாதம் சிம்மம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது வக்ர நிவர்த்தி அடைகிறார். 14-05-2020 முதல் வக்கிரம் பெற்று 29-06-2020 ஆம் தேதி வக்கிர கதி பெற்று தனுசு ராசிக்கு குரு வந்துவிடுகிறார்.செப்டம்பர் 13ஆம் தேதி வரை குரு பகவான் வக்ரமாக தனுசு ராசியில் சஞ்சரிப்பார்.

அந்தவகையில் 120 நாட்கள் வக்ரநிலையில் சஞ்சரிக்கும் குருபகவான் யாருக்கு சாதகமான பலனையும் யாருக்கு பாதகமான பலனையும் தரப்போகிறார் என்று பார்ப்போம்.

மேஷம்
குரு பகவான் இந்த வக்ர காலத்தில் உத்திராடம், பூராடம் ராசிகளில் சஞ்சரிப்பதனால் மேஷம் ராசிக்காரர்களுக்கு புது தெம்பும் உற்சாகமும் கிடைக்கும். கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். சில சமயங்களில் தயக்கமும் தடுமாற்றமும் ஏற்படும். பணத்தட்டுப்பாடுகள் நீங்கும். வியாபாரத்தில் சரக்குகள் விற்று தீரும். சிலருக்கு கடையை விரிவுபடுத்தும் சூழல் உருவாகும். வீட்டிற்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்வீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். அசுவினி நட்சத்திரக்காரர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பரணி நட்சத்திரகாரர்கள் நிதானமாக பேசுங்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் வாங்கும் நிலை உருவாகும் கவனம் தேவை.

ரிஷபம்
இதுவரை இருந்த‌ மன இறுக்கங்கள் குறைந்து மன‌ அமைதி உண்டாகும். சிலருக்கு திருமண பேச்சுக்கள் கைகூடி வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரைகுறையாக நின்ற வேலைகளின் பணியைத் தொடங்குவீர்கள். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் தீரும். வேலையில் இருப்பவர்கள் கவனத்துடன் வேலை செய்யுங்கள். பதற்றமும் படபடப்பும் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க வேண்டும்.

மிதுனம்
குருபகவானின் வக்ர காலத்தில் கொஞ்சம் முன்னெச்சரிக்கை அவசியம். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவுகளை எடுத்து காரியத்தில் இறங்காதீர்கள். உங்களின் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். அரசு காரியங்களில் தடைகள் ஏற்படும். திடீர் பணவரவு ஏற்படும் என்றாலும் செலவுகளை கட்டுப்படுத்துங்கள். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் ஏற்படும். கல்வி சுமாராக இருக்கும்.

கடகம்
இதுவரை தடைபட்டு வந்த காரியங்கள் மளமளவென நிறைவடையும். அரசு வழி காரியங்களில் அனுகூலம் கிடைக்கும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் தடைகள் இன்றி நிறைவேறும். குரு தனுசு ராசியில் வக்ரகதியில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. அவசரப்பட்டு பேசிவிட்டு அவதிப்படாதீங்க பேச்சில் கவனமாக இருங்க. சிலருக்கு வீண் அலைச்சல்கள் ஏற்படும்.

சிம்மம்
உங்களுக்கு பணவருமானம் கிடைப்பதால் பழைய கடன்களை அடைப்பீர்கள். வீடு கட்ட முயற்சிகள் செய்வீர்கள். உறவினர்களுடன் கூடி மகிழ்வீர்கள். தடைபட்டு போயிருந்த சுப காரியங்களை நடத்துவீர்கள். உங்களின் அழகும் ஆரோக்கியமும் கூடும். கொரோனா வைரஸ் லாக்டவுனால் வேலை இல்லையே என்ன செய்வது என்று கவலைப்பட வேண்டாம் இந்த 120 நாட்களில் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் பணம் கிடைக்கும்.

கன்னி
சச்சரவுகள் நீங்கி குடும்பம் அமைதியான சூழ்நிலைக்கு மாறும். இந்த கால கட்டத்தில் உங்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். தடைபட்டிருந்த திருமணம் கைகூடி வரும். எதற்கெடுத்தாலும் விதண்டாவாதம் பேசாதீர்கள் சற்று விட்டுக்கொடுத்து போங்க. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம் புரிந்துகொண்டு நடவுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.

துலாம் முதல் மீனம் வரை!

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவீட்டிற்குள் சாய்சா போட்ட குத்தாட்டம் செம‌ வைரலாகும் வீடியோ!ஆர்யா எங்கே?
Next articleமூதாட்டியின் காதிற்குள் வலை பின்னி வாழ்ந்து வந்த சிலந்தி!