Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan Today Rasi palan இன்றைய ராசி பலன் – 12.01.2020 இன்றைய பஞ்சாங்கம்...

Today Rasi palan இன்றைய ராசி பலன் – 12.01.2020 இன்றைய பஞ்சாங்கம் ஞாயிற்றுக்கிழமை !

0
1206

இன்றைய பஞ்சாங்கம்
12-01-2020, மார்கழி 27, ஞாயிற்றுக்கிழமை, துதியை திதி இரவு 08.12 வரை பின்பு தேய்பிறை திரிதியை. பூசம் நட்சத்திரம் பகல் 11.49 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. நவகிரக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

இன்றைய ராசி பலன் – 12.01.2020

மேஷம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உங்களுக்கு எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினைகள் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.

மிதுனம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய நேரிடும். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை தரும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். உற்றார் உறவினர்கள் உதவியால் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.

கடகம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

சிம்மம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் சிறு விரயங்கள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். தொழில் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கன்னி ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் லாபகரமான பலன்கள் உண்டாகும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் கூட்டாளிகளின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும்.

துலாம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உங்களுக்கு மன அமைதி இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை கூடும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். பயணங்களால் வெளிவட்டார நட்பு ஏற்படும். தேவைகள் பூர்த்தியாகும். நினைத்தது நிறைவேறும்.

விருச்சிகம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

தனுசு ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று நீங்கள் எதிர்பாராத செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் விஷயத்தில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் கவனம் தேவை. தூர பயணங்களை தவிர்க்கவும்.

மகரம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று குடும்பத்தில் இனிய சம்பவங்கள் நிகழும். பிள்ளைகள் புது உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் அமையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும்.

கும்பம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கொடுக்கல் வாங்கலில் நல்ல லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உங்களுக்கு உடன்பிறந்தவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். ஆரோக்கிய பாதிப்புகள் குறைய உணவு விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

Previous articleToday Rasi Palan இன்றைய ராசி பலன் – 11.01.2020 ! இன்றைய பஞ்சாங்கம் சனிக்கிழமை!
Next articleThirukkural Niraiyalithal Adhikaram-126 திருக்குறள் நிறையழிதல் அதிகாரம்-126 கற்பியல் காமத்துப்பால் karpiyal kamathupal in Tamil