Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan Today Rasi Palan இன்றைய பஞ்சாங்கம் 17-12-2019 ராசி பலன்!

Today Rasi Palan இன்றைய பஞ்சாங்கம் 17-12-2019 ராசி பலன்!

0
969

இன்றைய பஞ்சாங்கம் 17-12-2019
மார்கழி 01
செவ்வாய்க்கிழமை
சஷ்டி திதி பின்இரவு 01.37 வரை பின்பு தேய்பிறை சப்தமி.
மகம் நட்சத்திரம் பின்இரவு 01.26 வரை பின்பு பூரம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 0.
சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது.
தனுர் மாத பூஜை ஆரம்பம்
இராகு காலம் மதியம் 03.00-04.30
எம கண்டம் காலை 09.00-10.30
குளிகன் மதியம் 12.00-1.30
சுப ஹோரைகள் காலை 8.00-9.00,
மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00,
இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய நாளுக்கான ராசி பலன் – 17.12.2019

மேஷம்: இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். அலுவலகத்தில் தேவையில்லாத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் சிக்கல்களை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.

ரிஷபம்: இன்று உங்களுக்கு வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சில தடங்கல்கள் ஏற்படலாம். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.

மிதுனம்: இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். திடீர் பணவரவு உண்டாகும். கடன்கள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கடகம்: இன்று உங்களுக்கு உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம். தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நற்பலன்களை அடையலாம்.

சிம்மம்: இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். உத்தியோக ரீதியாக எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.

கன்னி: இன்று உங்களுக்கு உறவினர்களின் திடீர் வருகையால் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். திருமண சுபகாரிய முயற்சிகளில் சற்று மந்த நிலை உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

துலாம்: இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும்.

விருச்சிகம்: இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.

தனுசு: இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும். உத்தியோக ரீதியான பயணங்களால் வெளிவட்டார நட்பு கிட்டும். பணவரவு சுமாராக இருக்கும். தேவைகள் நிறைவேறும்.

மகரம்: இன்று உங்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாக செல்ல வேண்டும்.

கும்பம்: இன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.

மீனம்: இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சிலருக்கு புதிய பொருள், வண்டி, வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.

Previous articleThirukkural Vaan Sirappu Adhikaram-2 திருக்குறள் வான் சிறப்பு அதிகாரம்-2 பாயிரவியல் அறத்துப்பால் Pairaviyal Arathupal in Tamil !
Next articleகிளுகிளுப்பான கவர்ச்சி போஸ் கொடுத்து தன் முன் அழகை காட்டி ரசிகர்களை சுண்டி இழுக்கும் அபிராமி !