Home thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal மரணித்த குழந்தையின் முகம் வானில் தெரிந்த அதிசயம்: நாடே கண்ணீரில் மூழ்கிய சோகம்!

மரணித்த குழந்தையின் முகம் வானில் தெரிந்த அதிசயம்: நாடே கண்ணீரில் மூழ்கிய சோகம்!

0
656

ஒவ்வொரு குழந்தையும் வரம்..குழந்தைகள் சுமக்க தாய் படும் அதே வலியை துன்பத்தை தான் வளர்ப்பதற்காக தந்தையும் படுகிறார். ஆனால் அந்த குழந்தை உலகத்தை விட்டு பிரிந்து விடும் என்று தெரியும் நொடியில் தந்தையும் மனதால் மரணித்து விடுகிறான்.

பிரித்தானியாவில் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஆல்பி இவான் என்ற குழந்தை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உயிருக்கு போராடி வந்துள்ளார்.

இக்குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல், இவரது தந்தை தனது குழந்தை குறித்த தகவல்களை சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியிட்டதன் காரனமாக அந்நாட்டு மக்களின் இதயங்களில் இவான் நீங்கா இடம்பிடித்துள்ளார்.

இதனால், நலமுடன் இக்குழந்தை வீடு திரும்ப வேண்டும் என அந்நாட்டு மக்கள் பிரார்த்தனை செய்து வந்தனர்.

இப்படியிருக்கையில், செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இக்குழந்தை கடந்த சனிக்கிழமை 2.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டது.

இந்நிலையில், குழந்தையின் தந்தை தன் குழந்தை இறந்துவிட்டதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஏராளமானோர் மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இதில், ஒரு பகுதியாக இவானின் பெயரை பலூனில் எழுதி அதனை வானத்தில் பறக்கவிட்டுள்ளனர்.

அப்போது, மேகத்தில், இவானின் முகம் தெரிந்துள்ளது, இதனை அப்பகுதியில் இருந்த ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது, சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகியுள்ளது.

Previous articleமில்லியன் சொத்துக்களுக்கு சொந்தக்கரரான ஜாக்கிசானின் மகள் தெருவில் வசிக்கும் பரிதாபம்!
Next articleவீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!