Home thatstamil one india tamil oneindia tamil suvarasiyam விண்ணில் நிலைநிறுத்தியது இஸ்ரோ‍ ‍- ‍‍‍பூமியை கண்காணிக்க புதிய செயற்கைகோள்!

விண்ணில் நிலைநிறுத்தியது இஸ்ரோ‍ ‍- ‍‍‍பூமியை கண்காணிக்க புதிய செயற்கைகோள்!

0
1059

விண்ணில் நிலைநிறுத்தியது இஸ்ரோ‍ ‍- ‍‍‍பூமியை கண்காணிக்க புதிய செயற்கைகோள்!

பூமியை கண்காணித்து துல்லியமான தகவல்களை அளிப்பதற்காகவும், எல்லைகளை கண்காணித்து தகவல் அளிக்கவும் இஸ்ரோ கார்டோசாட் என்ற செயற்கை கோளை விண்ணில் இன்று செலுத்தியது.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, கார்டோசாட்-3 என்ற செயற்கைக்கோளை தயாரித்தது. இந்த செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 13 நானோ வகை செயற்கைகோள்கள் இன்று பி.எஸ்.எல்.வி. சி-47 ரொக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

திட்டமிடப்பட்ட சரியான நேர்கோட்டில் பயணித்த பிஎஸ்எல்வி சி47 ரொக்கெட் பூமியின் சுற்றுவட்டப்பாதையை அடைந்ததும் கார்டோசாட் 3 செயற்கைகோள் தனியாக பிரிக்கப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

அதனுடன் அனுப்பபட்ட நானோ செயற்கைகோள் ஒன்றன்பின் ஒன்றாக நிலைநிறுத்தப்பட்டது.

அதன்பின்னர் இந்த திட்டத்தின் வெற்றி குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் உரையாற்றினார்.

இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!

Previous article5G தொழில்நுட்பம் தொடர்பாக வெளியான சுவாரஸ்ய தகவல்!
Next articleஇறந்த பின்னர் வயிற்றை கிழித்து சோதித்த போது காத்திருந்த அதிர்ச்சி! உயிருடன் கரை ஒதுங்கிய திமிங்கலம்!