உலகில் மக்கள் அவஸ்தைப்படும் பிரச்சனைகளில் முதன்மையானது உடல் பருமன். உடல் பருமனைக் குறைக்க பலரும் பல வழிகளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். சிலர் உடல் எடையைக் குறைக்க சிகிச்சை எல்லாம் மேற்கொள்கிறார்கள். ஆனால் அப்படி கஷ்டப்படுவதற்கு பதிலாக, இயற்கை தந்த வரப்பிரசாதமான கற்றாழையைக் கொண்டே எளிமையாக உடல் எடையைக் குறைக்கலாம்.
கற்றாழை வெறும் சருமத்தைப் பராமரிப்பதற்கு மட்டுமின்றி, உடல் எடையையும் குறைக்க உதவுகிறது. கற்றாழையில் இருக்கும் ஜெல்லில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், நொதிகள், கார்போஹைட்ரேட்டுகள், அமினோ ஆசிட்டுகள், சாலிசிலிக் ஆசிட்டுகள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் போன்றவை உள்ளது. இவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளதால் என்னவோ, இது ஒருவரின் உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
அதற்கு அன்றாடம் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மற்றும் உடற்பயிற்சி செய்வதற்கு முன் கற்றாழை ஜூஸைக் குடிக்க வேண்டும். பலருக்கும் கற்றாழையை எப்படி ஜூஸ் செய்து குடிப்பது என்று தெரியாது. அத்தகையவர்களுக்கு இக்கட்டுரை மிகவும் உதவியாக இருக்கும்.
கற்றாழை மற்றும் பழச்சாறு
கற்றாழை இலையின் மேலே உள்ள பச்சை நிறப் பகுதியை நீக்கிவிட்டு, அதன் ஜெல்லை எடுத்து, உங்களுக்கு விருப்பமான பழச்சாறுடன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.
வெறும் கற்றாழை ஜூஸ்
கற்றாழை இலையின் பச்சை நிறத் தோலை நீக்கிவிட்டு, அதன் ஜெல்லை மிக்ஸியில் போட்டு அரைத்து, வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரித்துக் கொண்டு, தினமும் காலையில் 1/2 கப் மற்றும் உணவு உண்ணும் 15 நிமிடத்திற்கு முன் என தொடர்ந்து 1-2 வாரங்கள் குடித்து வர, உங்கள் எடையில் நல்ல மாற்றத்தை நீங்களே காணலாம்.
கற்றாழை ஜூஸ் மற்றும் எலுமிச்சை
கற்றாழை ஜெல்லை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு, தண்ணீர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, தினமும் குடித்து வரலாம்.
கற்றாழை மற்றும் தேன்
ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும், உடல் எடையைக் குறைக்கலாம்.
நீருடன் கற்றாழை ஜூஸ்
1-2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை நீரில் கலந்து, தினமும் ஒரு டம்ளர் குடித்து வர எடை குறையும்.