ஆழ்துளை கிணற்றில் சுர்ஜித் விழுந்தது எப்படி? 14 மணிநேரம் போராட்டம்! பகீர் தகவல்கள் !

0

திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தையை மீட்பதற்கு போராடி வரும் நிலையில் உலகமே இக்குழந்தையின் உயிரைக் காப்பாற்ற பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றது.

மூடப்பட்டதாக கூறப்பட்ட இந்த ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன் எவ்வாறு விழுந்தான் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிரிட்டோ – கலாமேரி இவர்களின் குழந்தை சுர்ஜித் வில்சன்(2). கட்டிட தொழிலாளியாக இருந்த பிரிட்டோ தனது வீட்டு பக்கத்தில் விவசாயமும் செய்து வந்துள்ளார்.

இதனால் தண்ணீர் பற்றாக்குறையினைச் சமாளிக்க 7 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் தோட்டப்பகுதியில் சுமார் 400 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணற்றினை அமைத்துள்ளார்.

ஆனால் ஒரு வருடம் மட்டுமே பயன்பாட்டில் இருந்த இக்கிணற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால் பின் யாரும் பயன்படுத்தாமல், அதனை மூடும் வகையில் மேல்மட்டம் மண்ணைக் கொட்டியுள்ளனர்.

சரியாக மூடப்படாத நிலையில் அந்த பகுதியில் சோளம் சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளார். சமீபத்தில் மணப்பாறையில் ஏற்பட்ட மழையின் காரணமான ஆழ்துளை கிணற்றினை மூடப்பட்ட மண் 30 அடி ஆழம் வரை கரைந்து கீழே இறங்கியதால் குழி மீண்டும் திறந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனைக் கவனிக்காத நிலையில், நேற்று மாலை விளையாடிக்கொண்டிருந்த குழந்தை அந்த பக்கம் வரும் பொழுது எதிர்பாராதவிதமாக தவறி உள்ளே விழுந்துள்ளது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் மீட்பு படையினருக்கு தகவல் அளிக்கவும்தான், அடுத்தடுத்த மீட்பு பணிகள் தொடங்கின.

குழந்தையினை மீட்பதற்கு எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்து வருகின்றது. குழந்தையை மீட்பதற்கு ஒரு கையில் கயிறு மூலம் சுறுக்கு போடப்பட்ட நிலையில், மற்றொரு கையில் முயற்சிக்கையில் அது பலன் அளிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

தற்போது குழந்தைக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வரும் நிலையில் குழந்தை 27 அடியில் இருந்த சுர்ஜித், 68 அடி ஆழத்திற்கு சென்றுள்ளார். தற்போது 70 அடிக்கு சென்றுள்ளது மீண்டும் பயத்தினையும் ஆதங்கத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வளவு டெக்னாலஜி உலகத்தில் வாழ்ந்துவந்தாலும் ஒரு 27 அடியில் இருந்த குழந்தையினைக் காப்பாற்ற முடியாமல் தற்போது 70 அடி ஆழத்தில் செல்ல விட்டுள்ளோமோ? என்று மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

உலகமே இக்குழந்தைக்கு பிரார்த்தனை செய்துகொண்டிருக்கும் வேளையில், #PrayForSujith, #SaveSujith என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஎன்னால் சுவாசிக்க முடியாமல் உள்ளது நான் மரணித்துக்கொண்ருக்கின்றேன் -வியட்நாமிய பெண் குறுஞ்செய்தி-கொள்கலனிற்குள் மரணித்திருக்கலாம் என அச்சம் !
Next articleமணலால் மூடப்பட்ட நிலையில் அசைவற்று காணப்படும் சுர்ஜித் மகனைக் காப்பாற்ற தையல் மிஷினில் தாய்!