மணலால் மூடப்பட்ட நிலையில் அசைவற்று காணப்படும் சுர்ஜித் மகனைக் காப்பாற்ற தையல் மிஷினில் தாய்!

0

திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தையை மீட்பதற்கு போராடி வரும் நிலையில் உலகமே பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் திரைத்துறையினர் தங்களது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.

பிரிட்டோ – கலாமேரி இவர்களின் குழந்தை சுர்ஜித் வில்சன்(2). கட்டிட தொழிலாளியாக இருந்த பிரிட்டோ தனது வீட்டு பக்கத்தில் விவசாயமும் செய்து வந்துள்ளார்.

இதனால் தண்ணீர் பற்றாக்குறையினைச் சமாளிக்க 7 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் தோட்டப்பகுதியில் சுமார் 400 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணற்றினை அமைத்து, அதனை ஒரு வருடம் மட்டுமே பயன்படுத்திவிட்டு, தண்ணீர் இல்லாத காரணத்தினால் பயன்படுத்தாமல் போட்டுள்ளதை சரியாக மூடாத காரணத்தினால் மழையின் காரணமாக மீண்டும் அந்த இடம் குழியாகியுள்ளது.

தற்போது இந்த சம்பவத்தினால் பிரபலங்கள் பலரும் தங்களது உருக்கமான கருத்துக்களை பதிவிட்டு பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் குழந்தையின் தாய் குழந்தையைக் காப்பாற்றுவதற்காக துணிப் பை ஒன்றினை தைத்துக்கொடுத்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

குழந்தையினைக் காப்பாற்ற துணிப்பை தேவைப்பட்டதால், டெய்லர் கடை எங்கே இருக்கின்றது என்று கேட்ட மீட்பு குழுவினருக்கு எனது மகனைக் காப்பாற்ற நானே தைத்து தருகிறேன் என்று தாயார் தையல் மிஷினில் அமர்ந்து பை தைத்து கொடுத்த புகைப்படம் அனைவரது நெஞ்சையும் கலங்க வைத்துள்ளது.

இத்தருணத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழுவிலிருந்து 20 பேர் நடுகாட்டுபட்டிக்கு வந்துள்ளது. தற்போது குழந்தை சிறிது மணலால் மூடப்பட்ட நிலையில் அசைவின்றி காணப்படுகின்றது. நேற்று மாலை 5.40க்கு விழுந்த குழந்தை தற்போது 20 மணி நேரமாக போராடி வருகின்றது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆழ்துளை கிணற்றில் சுர்ஜித் விழுந்தது எப்படி? 14 மணிநேரம் போராட்டம்! பகீர் தகவல்கள் !
Next articleToday Rasi Palan இன்றைய ராசி பலன் – 27.10.2019 ஞாயிற்றுக்கிழமை!