திராட்சையில், கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என, பல வகைகள் உண்டு.
எந்த திராட்சையாக இருந்தாலும், நோய்களை குணப்படுத்தும் சக்தி உண்டு.
100 கிராம் கான்கார்ட் திராட்சையில் 353 kcal உள்ளது. திராட்சையில்,
3.92 கிராம் புரதம்
82.35 கிராம் கார்போஹைட்ரேட்
7.8 கிராம் ஃபைபர்
667 மிகி பொட்டாசியம்
59 மி.கி சோடியம்
10 மி.கி கால்சியம் ஆகிய ஊட்டச்சத்துக்களும் உண்டு.
எனினும், திராட்சை விதையின் நன்மைகள் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. அப்படி அறிந்து கொள்ள இந்த கட்டுரையை படியுங்கள்.
தற்போது புற்றுநோய் அமைதியாக பலரையும் தாக்குவதாலும், புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகளை சரியாக கவனிக்காமல் விட்டுவிடுவதாலும், முற்றிய நிலையில் நிறைய பேர் புற்றுநோயால் உயிரை இழக்கின்றனர்.
புற்றுநோய் செல்கள் அழிக்க கீமோ தெரபி சிகிச்சைகள் இருந்தாலும், ஓர் இயற்கை மருந்தும் உள்ளது.
நம்மில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஒரு பழம் தான் திராட்சை. பொதுவாக இந்த திராட்சையில் உள்ள விதையை பலரும் தூக்கி எறிந்துவிடுவோம்.
ஆனால் மற்ற அனைத்து பழங்களை விடவும், திராட்சையின் விதைகளில் சக்தி வாய்ந்த புற்றுநோய் செல்களை அழிக்கும் பண்புகள் மற்றும் உட்பொருட்கள் உள்ளது.
ஆய்வு
சமீபத்திய புதிய ஆய்வில், கீமோ தெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைகளை விட, திராட்சை விதை முற்றிய நிலையில் இருக்கும் புற்றுநோய் செல்களையும் அழிக்கும் சக்தி உள்ளதாக தெரிய வந்துள்ளது.
பக்கவிளைவு அற்ற பொருள்
பொதுவாக புற்றுநோய்க்கு கீமோ தெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது, ஆரோக்கியமான செல்களும் பாதிக்கப்படும்.
ஆனால் திராட்சை விதையைக் கொண்டு புற்றுநோய்க்கு சிகிச்சை மேற்கொண்டால், அது புற்றுநோய் செல்களை மட்டும் நேரடியாக தாக்கி அழிப்பதாகவும், ஆரோக்கியமான செல்களுக்கு எவ்வித பாதிப்பு இல்லை என்பதும் ஆய்வில் தெரிய வந்தது.
இப்போது அந்த திராட்சை விதையைக் கொண்டு எப்படி மருந்து தயாரித்து பயன்படுத்துவது என்று காண்போம்.
தேவையான பொருட்கள்
திராட்சை விதை – 1 கப்
கண்ணாடி ஜார் – 1
சுத்தமான காட்டன் துணி – 1
தயாரிக்கும் முறை
முதலில் திராட்சை பழத்தில் இருந்து விதையைப் பிரித்தெடுத்து, நன்கு கழுவி, துணி கொண்டு கட்டி நீரை முற்றிலும் உறிஞ்சி, 2-3 நாட்கள் நன்கு உலர்த்த வேண்டும்.
3 நாட்கள் கழித்து, அந்த விதையை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து, கண்ணாடி ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை
ஒரு நாளைக்கு 2-3 முறை இந்த பவுடரை பயன்படுத்த வேண்டும். ஆகவே குடிக்கும் நீர் அல்லது ஜூஸில் 1 டீஸ்பூன் திராட்சை விதைப் பொடியை சேர்த்து கலந்து, குறைந்தது ஒரு நாளைக்கு 2 முறை குடிக்க வேண்டும்.
இப்படி தொடர்ந்து 3 மாதங்கள் குடித்து வந்தால், உடலினுள் ஓர் அற்புத மாற்றம் ஏற்பட்டிருப்பதை நன்கு உணர்வீர்கள்.