இது அழகுக்கு சலாம் போடும் ‘வேடிக்கை’ மனிதர்களின் உலகம்! இங்கே, தாய்ப்பாலின் அருமையைக் கூட ஐஸ்வர்யாராய் எடுத்துச் சொன்னால்தான் எடுபடுகிறது! செக்கச் சிவப்பை அள்ளித் தருகிற குங்குமப்பூ, தோலை பளபளப்பாக்கி பளீரிட வைக்கிறது. ஸ்பெயின் நாட்டில் அதிகமாக விளையும் குங்குமப் பூவின் விலையைப் போலவே, அது அள்ளித் தரும் பலன்களும் அதிகம்.
முகச் சுருக்கத்தைப் போக்கி பொலிவை கூட்டும் குங்குமப்பூவின் அசத்தல் டிப்ஸ்.
10 கீரல் குங்குமப்பூவை 1 டீஸ்பூன் பாலில் கலந்து ஊறவைத்து நன்றாக மசியுங்கள். இதை முகத்தில் பூசி உலர்ந்ததும் கழுவுங்கள். முகச் சுருக்கம் காணாமல் போய், 10 வயது குறைவாக காட்டும்.
மழைக் காலம். தோலில் வறட்சி தாண்டவமாடும். வறட்டுத்தன்மையை அடியோடு அகற்ற செய்கிறது குங்குமப்பூ. பாதாம்பருப்பு & 25 கிராம், ரவை & 30 கிராம், குங்குமப்பூ & 10 கிராம்… இவற்றை நன்றாக இடித்துக் கொள்ளுங்கள். இது கலக்கும் அளவுக்கு பசும்பால் சேர்த்து, வடை மாதிரி செய்து உலர்த்துங்கள். இதில் ஒன்றை எடுத்து, பால் ஏடு கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். ரவை, தோலில் உள்ள இறந்த செல்களை அகற்றி, புது செல்களை உருவாக்கும்.
பாதாம், வறட்சியைப் போக்கும். குங்குமப்பூ, நிறத்தைக் கொடுத்து வசீகர அழகை வழங்கும். முகத்தில் தொய்வு இல்லாமல் பளிங்கு போல் மாற்றிக் காட்டுகிறது, இந்த குங்குமப்பூ ஸ்க்ரப். சர்க்கரையை அரைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து, அது கலக்கும் அளவுக்கு வெண்ணெய், குங்குமப்பூ சம அளவு சேர்த்து ஒரு கிண்ணத்தில் போட்டு கைகளால் நுரை வரும் வரை நன்றாக மசியுங்கள். க்ரீமாக வந்ததும், முகப் பகுதியில் கீழிருந்து மேல் நோக்கி பூசி, ஐந்து நிமிடம் நன்றாக தேயுங்கள். பத்து நாட்களுக்கு ஒரு முறை இப்படி செய்து வர, முகம் தொய்வில்லாமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
விசேஷங்களுக்கு போகும்போது அழகாக தெரிய வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பம்தான். இதற்கு பியூட்டி பார்லருக்குதான் ஓட வேண்டும் என்பதில்லை. இந்த குங்குமப்பூ ப்ளீச் செய்து பாருங்கள். குங்குமப்பூவை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டீஸ்பூன், முல்தானிமட்டி & 2 டீஸ்பூன்… இதனுடன் வெந்நீர் சேர்த்து பேஸ்ட் ஆக்குங்கள். முகம், கழுத்து பகுதிகளில் ‘திக்Õகாக பூசி, ஐந்து நிமிடம் கழித்து கழுவுங்கள். பியூட்டி பார்லருக்கு போய் ‘ப்ளீச்’ செய்தது போல் பளிச்சென மின்னும்.
தோலை பளபளப்பாக்கி, சிகப்பு நிறத்தை அள்ளித்தரும் குங்குமப்பூ ஸ்பெயின் நாட்டில்தான் அதிகம் விளைகிறது. விலையும் அதிகம்தான்! ஆனாலும் அழகு கலையில் முக்கிய இடம் வகிக்கிறது.
முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி முகத்தை ஜொலிக்க வைக்கும் அசத்தல் டிப்ஸ் இதோ:
குங்குமப்பூவில் 10 பிசிறை எடுத்து, பாலில் ஊற வையுங்கள். நன்றாக ஊறியதும் அதை மசியுங்கள். அதை அப்படியே எடுத்து, முகத்தில் தடவுங்கள். உலர்ந்த பிறகு முகத்தை சுத்தமான தண்ணீரால் கழுவுங்கள். டவலால் அழுத்தமாக துடைக்காமல் ஒத்தி எடுங்கள். இப்போது கண்ணாடியில் முகத்தைப் பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு சில வயது குறைந்திருக்குமாம்! முகமும் பொலிவுடன் காணப்படும்.
கோடை முடிஞ்சு இனி பனி, மழைக்காலம் ஆரம்பம், தோலில் வறட்சி வந்து குடி கொள்ளும். இந்த வறட்டுத் தன்மையை அடியோடு அகற்றும் சக்தி குங்குமப்பூவுக்கு உண்டு! சிறிதளவு குங்குமப்பூ, 30 கிராம் ரவை, பாதாம் பருப்பு 25 கிராம் இந்த மூன்றையும் சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ளவும். பின்னர் அவற்றுடன் பசும்பாலை சேர்த்து கலக்கவும். கொஞ்ச நேரம் உலர வைக்கவும். உலர்ந்த பிறகு அவற்றுடன் பால்ஏடு சேர்த்து கலந்து, முகத்தில் பூசவும். பத்து நிமிடம் கழித்து முகத்தை சுத்தமான நீரில் கழுவினால், முகம் பளபளவென ஜொலிக்கும். இதில் உள்ள பாதாம்பருப்பு வறட்சியை நீக்கும். ரவை முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, புது செல்களை உண்டாக்கும், குங்குமப்பூ தோலுக்கு சிகப்பை கொடுத்து, முகத்தை அழகாக்கும்!
கொஞ்சம் வயசானால் முகத்தில் ஒருவித முரட்டுத்தனம் ஏற்படும். அதை தடுத்து, பளிங்குபோல் மாற்ற ஒரு வழி!
ஒரு ஸ்பூன் அளவு சர்க்கரை எடுத்து நன்றாக அரைக்கவும். அதில், குங்குமப்பூ மற்றும் வெண்ணை சேர்த்து பிசையவும். பேஸ்ட் போல் வந்ததும், அதை எடுத்து, முகத்தில் கீழிருந்து மேலாக தேய்க்கவும். பத்து நிமிடம் இப்படி மெதுவாக தேய்த்தபிறகு முகத்தை கழுவி விடவும். வாரத்துக்கு ஒருமுறை இப்படி செய்து வந்தால், தொய்வில்லாத முகமாக மாறி பளிச் தெரியும்.
ஏதாவது, பார்ட்டி அல்லது விழாக்களுக்கு செல்லும்போது பலரும் நம்மை பார்க்க வேண்டும் என்று அனைவருக்குமே ஆசை உண்டு! அந்த ஆசையை நிறைவேற்றுகிறது குங்குமப்பூ. இதனால் பளிச்சென மாறி விழாவின் நாயகியாக நீங்கள் மாறினாலும் ஆச்சரியமில்லை!
சிறிதளவு குங்குமப்பூவை எடுத்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதில் முல்தானிமட்டி 2 ஸ்பூன், கொஞ்சம் வெந்நீர் சேர்த்து அரைத்து பேஸ்ட் போல் ஆக்கவும். அதை முகம், கழுத்து பகுதிகளில் பூசவும். பத்து நிமிடம் கழித்து கழுவினால் சும்மா கழுவி துடைத்த பளிங்கு சிலை போல் தகதகவென தங்கமாக மின்னுவீர்கள்! குங்குமப்பூவால் கலராக மாறும் ரகசியத்தை தெரிந்து கொண்டீர்களா? இனி ஜமாயுங்கள்!
எனக்கு முகத்துல எண்ணெய் வழியும்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க. அந்த அளவுக்கு பளிச்னு இருக்குறதுக்குக் காரணம் பியூட்டிஷியனா இருக்கற என் அக்காதான். அவங்க பால்ல குங்குமப்பூவை கலந்து தருவாங்க. அதை முகத்துல தடவி நல்லா மசாஜ் பண்ணுவேன். இதுனால முகம் பளபளப்பாகுறதோட, கரும்புள்ளிகளும் காணாம போயிடும். வறண்ட சருமம் இருக்கிறவங்க தேங்காய்ப் பாலோட குங்குமப்பூவை கலந்து மசாஜ் செய்யணும். தேங்காய்ப் பால்ல இருக்கற எண்ணெய்ப் பசை, வறண்ட சருமத்துக்கு ரொம்ப நல்லது. இப்போ நிறைய போலி குங்குமப்பூ வந்துடுச்சு.
ஒரிஜினல் குங்குமப்பூவை எப்படி கண்டுபிடிக்கிறதுனு சொல்லட்டுமா? ஒரிஜினல் குங்குமப்பூவை பால்ல போட்டா, பால் மஞ்சள் நிறத்துல மாறிடும். எனக்கு இன்னிக்கு வரை முடி உதிர்ந்ததே இல்லை. அதுக்குப் ‘பின்னால’ ஒரு காரணம் இருக்கு. குறுமிளகு, மருதாணி, கறிவேப்பிலை, செம்பருத்தி பூ எல்லாத்தையும் தண்ணியில அலசிட்டு, மிக்ஸியில நல்லா அரைச்சு, ஜூஸை மட்டும் வடிகட்டி எடுத்துக்குவேன். தேங்காய் எண்ணெயை இரும்பு கடாயில காய வச்சு, கை பொறுக்குற சூடு வரும்போது, இந்த ஜூஸை அதோட கலந்து கொஞ்ச நேரத்துல இறக்கிடுவேன். இந்த எண்ணெய்தான் என் கருகரு கூந்தலுக்குக் காரணம்.
குறுமிளகு, பொடுகுத் தொல்லையில இருந்து முடியை பாதுகாக்கும்ங்கிறது இந்த எண்ணெய்ல கூடுதல் பலன். கேரளாவுல இருக்கறவங்க தினமும் காலையில இந்த எண் ணெயை பஞ்சுல தொட்டு, இஞ்ச் இஞ்சா தலையில தேய்ச்சுட்டு ஒரு மணிநேரம் கழிச்சி ஷாம்பூ போடாம தலைக்குக் குளிப்பாங்க. இதனால தலையில போதுமான எண்ணெய் இருக்குமே தவிர, அது முகத்துல வழியாது. வாரத்துல ரெண்டு நாள் மட்டும் ஷாம்பூ போட்டுக் குளிப்பாங்க. பாதங்கள் வழவழப்பா இருக்கறதோட காரணத்தைச் சொல்லட்டுமா? கொஞ்சம் சொரசொரப்பான, அதே நேரம் காலை பதம் பார்த்துடாத மாதிரியான ஒரு கல்லை பாத்ரூம்ல வெச்சிருக்கேன். குளிச்சு முடிச்சதுமே இந்தக் கல்லால காலை நல்லா தேய்ப்பேன். இறந்த செல்கள்லாம் உரிஞ்சு வந்துடும். இதை தினமும் செஞ்சுட்டு வந்தா, ‘பித்த வெடிப்பா.. அப்படின்னா என்ன?’னு கேக்கலாம்!”