கூலிக்கேட்ட தொழிலாளியை சிங்கத்தை ஏவி கடிக்க விட்ட கொடூரம்!!!

0

தொழிலாளர்கள் என்றாலே ஏமாற்றம், கஷ்டம் , அடிமை போன்ற வார்த்தைகள்தான் இப்போதெல்லாம் ஞாபகத்திற்கு வந்து செல்கிறது. உலகத்தின் ஏதோ மூளையில் எதோ ஒரு தொழிலாளி பாதிக்கப்பட்டு கொண்டேதான் இருக்கிறான். என்னதான் விஞ்ஞானம், தொழிநுட்பமெல்லாம் வளர்ச்சிக்கண்டாலும் தொழிலாளர்கள் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தலைநகர் லாகூரில் உள்ள ‌ஷாக்தாரா மாவட்டத்தை சேர்ந்த அலி ரஸா என்பவர், மத கூட்டங்கள் நடத்தும் மண்டபம் ஒன்றை நிர்வகித்து வருகிறார்.

அண்மையில் இந்த மண்டபத்தில் மின் வினியோகத்தில் பழுது ஏற்பட்டது. எனவே அதே பகுதியை சேர்ந்த முகமது ரக்பி என்ற தொழிலாளி இதனை சரிசெய்து கொடுத்துள்ளார். ஆனால் அதற்கான கூலியை கொடுக்காமல் அலி ரஸா அவரை ஏமாற்றி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த முகமது ரக்பி, அலி ரஸாவின் வீட்டுக்கு சென்று வேலைபார்த்ததற்கான கூலியை உடனே தரும்படி கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அலி ரஸா , தான் செல்லப்பிராணியாக வளர்த்து வரும் சிங்கத்தை முகமது ரக்பி மீது ஏவிவிட்டுள்ளார். இதன் போது முகமது ரக்பியின் முகம் மற்றும் கையை சிங்கம் கடித்து குதறியுள்ளது. அவர் வலியால் அலறும் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் சிங்கத்திடம் இருந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதையடுத்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் அலி ரஸா மீது பொலிஸார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article100 வது பிறந்தநாளை கொண்டாடிய இரட்டையர்கள் !
Next articleபேய் மாமாவில் வடிவேலுவிற்க்கு பதில் யோகிபாபு.