பிக்பாஸ் வீட்டிற்குள் தன்னை தமிழ்ப்பெண் என அடையாளப்படுத்திக் கொண்டவர் மதுமிதா. ஆனால் இவர் நிகழ்ச்சிக்காக தாலியை கழற்றிவிட்டு வந்தது குறித்து பல சர்ச்சைகள் எழுந்தன.
இதுகுறித்து முதன்முறையாக ஒரு பேட்டியில் பேசியுள்ளார் மதுமிதா. அதில் அவர், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன் எனது பொருள்களை செக் செய்தார்கள். அப்போது தாலி போன்ற பெரிய நகைகளை அணிந்தால் அது மைக்கில் உரசும், தாலியை அணிய வேண்டாம் என்றார்கள்.
தாலியை எப்படி கழற்ற முடியும் என கேட்க, டாஸ்க் செய்யும் போது யாராவது உங்கள் தாலியை பிடித்து இழுத்து அறுந்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார்கள்.
இதுகுறித்து என கணவரிடம் கேட்ட அவரும் சரி என்ற பிறகே தாலியை கழற்றினேன் என பேட்டியில் தெரிவித்துள்ளார்.




