அமெரிக்காவைச் சேர்ந்தவர் பாப். அவருடைய மகன் கேப் பர்டெட். ஒருநாள் அவரது வீட்டில் அப்பாவின் வரவுக்காக காத்திருந்துள்ளார் மகன்.
அந்த சமயம் பாப் அணிந்திருந்த ஆப்பிள் கைக்கடிகாரத்தில் இருந்து கேப் பர்டெடுக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது.
அதாவது அவர் அணிந்திருந்த ஆப்பிள் கைக்கடிகாரம் கீழே விழுந்துவிட்டது என்றும், அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்ற முழு விவரமும் அதில் இருந்துள்ளது.
இதன் மூலம் தன்னுடைய அப்பா விபத்தில் சிக்கியிருக்கலாம் என்பதை உணர்ந்த மகனார், உடனடியாக அவசர சிகிச்சை மையத்தை தொடர்பு கொண்டு, விபத்து நடந்த இடத்தை அறிந்து கொண்டு, அங்கு செல்லும் முன்,மருத்துவமனை ஒன்றில் அவரது தந்தை இருக்கிறார் என்ற தகவலும் ஆப்பிள் கைக்கடிகாரம் மூலம் அவருக்கு வந்துள்ளது.
சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கு மகன் தன்னுடைய வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.




