Home thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal ஐ நாவில் கண்ணீர் விட்டு அழுத்த சிறுமி !

ஐ நாவில் கண்ணீர் விட்டு அழுத்த சிறுமி !

0
1034

பருவநிலை நடவடிக்கை மாற்றம் குறித்த மாநாட்டில், ”கிரேட்டா தன்பெர்க்” என்ற ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16வயது சிறுமி ஒருவர், உலக தலைவர்கள் பணம், பொருளாதார வளர்ச்சி போன்ற கற்பனை உலகம் தொடர்பில் பேசி வருவதாகவும், ஆனால் பேரழிவின் தொடக்கத்தில் இந்த உலகம் இருப்பதாக, குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த முப்பது ஆண்டுகளாக சுற்றுசூழல் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக உயிரிழப்பு சூழல் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் அவர் கண்ணீரோடு கருத்து வெளியிட்டார்.

வளிமண்டலத்தை அச்சுறுத்தும் வாயுக்களின் வெளியேற்றம் காரணமாக மக்கள் உயிரிழந்துக்கொண்டிருக்கும் நிலையில், அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் கிரேக்கா தெரிவித்தார்.

இதனிடையே, எங்கள் பிரச்சனை குறித்து கவனிப்பதாக கூறுகிறீர்கள், எவ்வளவு வேதனைப்படுகிறீர்கள், கோபப்படுகிறீர்கள் என்பது எங்களுக்கு முக்கியமில்லை, இந்த பிரச்னையை உண்மையாகவே புரிந்து கொண்டும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், நீங்கள் பெரும் தீங்கிழைத்தவர்கள் என்று கண்ணீரோடு குற்றம் சாட்டியுள்ளார்.

Previous articleசாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ! வீட்டு வைத்திய குறிப்புகள் 2
Next articleபேசிய பணம் தரவில்லை ! அந்தப் படம் வெளியாக விட மாட்டோம் !!