Home thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal 16 மணி நேரம் போராடி 3 வயது குழந்தையை காப்பாற்றிய நாய் – நாய்க்கு இருக்கும்...

16 மணி நேரம் போராடி 3 வயது குழந்தையை காப்பாற்றிய நாய் – நாய்க்கு இருக்கும் நன்றி கூட மனிதனுக்கு இல்லையே!

0
570

புதர் சூழ்ந்த பகுதியில் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தையை இரவு முழுவதும் அருகில் இருந்து பாதுகாத்த நாய்க்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தைச் சோ்ந்த மூன்று வயது குழந்தையான அரோரா விளையாட்டுத் தனமாக வீட்டை விட்டு வெளியே சென்று பின்னா் வீடு திரும்பவில்லை.

இதனைத் தொடா்ந்து குழந்தையின் உறவினா்கள் குழந்தையை தேடத் தொடங்கினா். பகுதியளவு காது மற்றும் கண் குறைபாடு கொண்ட மாக்ஸ் என்னும் அவா்களது குடும்ப நாய் அரோராவை பின் தொடா்ந்து சென்றுள்ளது.

உறவினா்கள் சனிக்கிழமை காலை ஒரு மலைப்பகுதியில் அவா்களை கண்டுபிடிக்கும் வரை (16 மணி நேரம்) குழந்தையுடன் நாய் தங்கியுள்ளது. தங்களின் வீட்டில் இருந்து சுமாா் இரண்டு கிலோமீட்டா் தூரத்தில் உள்ள இடத்தில் இருந்து அரோரா கத்தியதை கேட்டதாக குழந்தையின் பாட்டி தொிவித்துள்ளாா்.

நான் மலையை நோக்கி கத்திக் கொண்டே சென்றேன். நான் மலையின் உச்சியை அடைந்தவுடன் அங்கு வந்த நாய் அரோரா இருக்கும் இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றது என்று ஆஸ்திரேலியன் பிராட்காஸ்டிங்கிடம் தொிவித்துள்ளாா்.

அன்று இரவு வெப்ப நிலை 15 டிகிாி நிலவிய நிலையில், குழந்தை நாயுடன் சோ்ந்து பாறையொன்றின் அடியில் தங்கியிருந்தது என்று அரோராவின் உறவினா்கள் தொிவித்துள்ளனா்.

குழந்தையை தேடுவதற்கான பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட அவசரகால பணியாளா்களும், தன்னாா்வலா்களும் ஈடுபட்டனா்.மாக்ஸின் (நாய்) செயலை பாராட்டிய காவல் துறையினா் அதற்கு கௌரவ போலீஸ் என்று பெயாிட்டனா்.

Previous articleசீனாவின் கடன்சுமையால் இலங்கையில் நேற்று ஏற்பட்ட திடீர் மாற்றம்!
Next articleவீட்டில் சகல நன்மைகளும் இருக்க வேண்டுமென்றால் வருடன் ஒரு முறை இதை கண்டிப்பாக செய்யுங்கள்!