Home thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal ஒரு தோட்டா பாய்ந்தால் அமெரிக்காவின் உடைமைகள் தீக்கிரையாகும்! உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்திய ஈரானின் எச்சரிக்கை!

ஒரு தோட்டா பாய்ந்தால் அமெரிக்காவின் உடைமைகள் தீக்கிரையாகும்! உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்திய ஈரானின் எச்சரிக்கை!

0
411

எங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு சொந்தமான உடைமைகள் தீக்கிரையாகும் என ஈரான் எச்சரித்துள்ளமை உலகரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த எச்சரிக்கையை ஈரான் நாட்டின் ராணுவ தளபதியின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் அபோல்பஸல் ஷேகர்ச்சி விடுத்துள்ளார்.

ஈரான் – அமெரிக்கா இடையே நடந்தது என்ன?

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, அந்நாட்டுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இதனால் ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது.

ஈரானும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்று பதிலடி கொடுத்து வரும் நிலையில் சமீபத்தில் ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு ஈரானும், அமெரிக்காவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தினர். இதற்கிடையே ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் என்ற பிராந்தியத்திற்குள் வந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் அதிரடியாக அறிவித்தது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, உளவு விமானம் சர்வதேச எல்லையில்தான் பறந்தது. அதை வேண்டுமேன்றே ஈரான் அரசு சுட்டு வீழ்த்தியதாக குற்றம்சாட்டியதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானை எச்சரிக்கும் விதமாக தனது டுவிட்டரில் “ஈரான் மிகப் பெரிய தவறு செய்து விட்டது” என பதிவிட்டிருந்தார்.

மேலும், ஈரான் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் தாக்குதல் நடத்த உத்தரவிட்டு அதனை கடைசி நிமிடத்தில் கைவிட்டதாக வெளிவந்த செய்தி இரு நாடுகளிடையே போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், எங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளுக்கு சொந்தமான உடைமைகள் தீக்கிரையாகும் என ஈரான் நாட்டின் ராணுவ தளபதியின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் அபோல்பஸல் ஷேகர்ச்சி எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Previous article130 ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்ட துயரம்! எச்சரித்தும் தடுக்க தவறிய சுவிஸ் நிர்வாகம்!
Next articleதிருணம் முடிந்த 30 வினாடிகளில் குழந்தை பெற்றெடுத்த மணப்பெண்!